- Advertisement -
Homeபொழுதுபோக்குஆக்சன் ஹீரோவாக நடிக்காதது ஏன்? நடிகர் மைக் மோகன் சொன்ன உண்மை - ...

ஆக்சன் ஹீரோவாக நடிக்காதது ஏன்? நடிகர் மைக் மோகன் சொன்ன உண்மை – ஆனா இப்போ இருக்கற ஹீரோக்களுக்கு இது தெரியலையே…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் வெள்ளி விழா நாயகனாக கொண்டாடப்பட்டவர் நடிகர் மோகன். பல படங்களில் பாடகராக மைக் பிடித்து நடித்ததால் மைக் மோகன் என அழைக்கப்பட்டார். இன்றும் அவரது நடிப்பில் அன்று வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. ரஜினி கமல் போல அதிக ரசிகர்கள் மோகனுக்கு அப்போது இருந்தனர்.

இன்றைய ஹீரோக்கள் பலரும் நடிக்க வந்து சில படங்கள் ஹிட் ஆகி விட்டாலே அடுத்து ஆக்சன் ஹீரோக்களாக மாறி விடுகின்றனர். ஆனால் நடிகர் மோகன் ஏராளமான படங்களில் நடித்தும் பல படங்களில் மென்மையான ஒரு நாயகனாக தான் காணப்பட்டார். சில படங்களில் மட்டுமே ஆக்சன் காட்சிகளில் நடித்திருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் மைக் மோகன் அதுபற்றி கூறியதாவது, நான்கைந்து படங்களில் நடித்தவுடன் ஆக்சன் ஹீரோவாக மாறிவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததே இல்லை. கதை அம்சம் தான் முக்கியம். கதையுடன் ஆக்சன் இருந்தால் அந்த படம் எந்த காலத்திலும் ஓடும்.

வெறும் ஆக்சன் மட்டுமே இருந்தால் அந்த படம் ஓடாது. கதைக்குள்ள ஒரு காரணம் இருக்கணும். அது மக்கள்கிட்ட போய் ரீச் ஆகணும். அதை நம்பறவன் நான். ஆக்சன் என்பது கதையில் ஒரு பகுதி. அன்று முதல் இன்று வரை என்னுடைய படங்களில் சண்டை காட்சி இருக்கும். அது கதையுடன் தொடர்புடைய சண்டை காட்சிகளாக மட்டுமே இருக்கும்.

- Advertisement -

100வது நாள் படத்தில் கிளைமாக்ஸில் எனக்கும் விஜயகாந்த் சாருக்கும் ஒரு பைட் இருக்கும். மனைவியை கொன்னவன்தான் நான்தான் என்று தெரிந்ததும் அந்த சண்டை வரும். ஏவிஎம் ஸ்டுடியோ செட்டில் எடுத்தாங்க. ஒரே ஷாட்டில் அந்த சண்டை காட்சியை படமாக்கினார்கள்.

சூப்பர் சுப்பராயன் தான் ஸ்டண்ட் மாஸ்டர். அந்த சண்டை காட்சி எக்ஸ்ட்ரானரியாக இருந்தது. அந்த காட்சி படத்தின் கதையுடன் கனெக்ட் ஆகியிருந்தது. அதனால் அந்த சண்டையை கதையுடன் இணைத்து பார்த்து மக்கள் ரசித்தார்கள். அதனால் ஆக்சன் ஹீரோவாக நடிக்க நான் ஆர்வம் காட்டியது இல்லை என்று நடிகர் மைக் மோகன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்