மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக இருப்பவர் மம்முட்டி. 70 வயதுகளை கடந்த நிலையிலும் இப்போதும் பிஸியாக நடித்துக்கொண்டு இரு்கிறார். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் அவருக்கான இடத்தை பிடித்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் தளபதி படத்தில் ரஜினியும் மம்முட்டியும் இணைந்து நடித்து அந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் மறுமலர்ச்சி ஆனந்தம் கிளிப்பேச்சு கேட்கவா எதிரும் புதிரும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மக்கள் ஆட்சி என பல படங்களில் மம்முட்டி நடித்திருக்கிறார்
நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் இளம் நடிகராக பெரிய அளவில் வளர்ந்து வருகிறார். கடந்தாண்டில் அவர் நடித்த தெலுங்கு படம் லக்கி பாஸ்கர் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் மம்முட்டியும் மலையாளத்தில் மற்றொரு சூப்பர் ஸ்டார் நடிகராக உள்ள மோகன்லாலும் இப்போது ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகர் மம்முட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சென்னையில் அதற்காக மருத்துவ பரிசோதனைகள் செய்த நிலையில் வெளிநாடுக்கு அவர் மேல் சிகிச்சைக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் பரவியது. இதற்கிடையே நடிகர் மோகன்லாலும், இருமுடி கட்டிச் சென்று சபரிமலை யப்பன் கோவிலில் மம்முட்டிக்காக பிரார்த்தனை செய்து வழிபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் நேற்று மோகன்லால் பிருத்விராஜ் நடித்த எல்2 எம்புரான் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லால் கலந்துக்கொண்டார். அப்போது அவரிடம் நடிகர் மம்முட்டியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு தகவல்கள் உள்ளன. உண்மையில் அவர் எப்படி இருக்கிறார். நீங்களும் சபரிமலையில் அவருக்கு பிரார்த்தனை செய்து வழிப்பட்டது ஏன் என்று கேட்கப்பட்டது.
அப்போது நடிகர் மோகன்லால் கூறியதாவது, மம்முட்டி நன்றாக இருக்கிறார். அவருக்கு என்னமோ உடல் ரீதியாக ஒரு சின்ன பிரச்னை இருந்தது. இது எல்லோருக்கும் இருக்கும். அது மாதிரிதான். நத்திங் டூ வொரி. கவலைப்படும்படியாக எதுவும் இல்லை. சபரிமலையில் அவருக்கான நான் பிரார்த்தனை செய்தது அவர் என்னுடைய நெருங்கிய நண்பர், என்னுடைய சகோதரர் என்பதற்காக தான் என்று நடிகர் மோகன்லால் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





