நடிகர் தனுஷ், அவரே இயக்கி நடித்த படம் ராயன். இது அவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், செல்வராகவன், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி, சரவணன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 26ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஏற்கனவே ப பாண்டி என்ற படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண், நடிகை ரேவதி முதிய வயது காதலை மையப்படுத்தி இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அத்துடன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தனுஷ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன்தான் ஹீரோவாக நடித்துள்ளார்.
கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள ராயன் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை்யமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக விரைவில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகி்னறன. விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான நாகார்ஜூனா, முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கூட நாகர்ஜூனா, தனுஷ் மற்றும் தனுஷ் மகன் ஏர்ப்போர்ட்டில் நடந்து சென்ற போது, நாகர்ஜூனா அருகில் வந்த வயதில் மூத்த ரசிகரை, முதியவரை பாதுகாவலர் ஒருவர் பிடித்து தள்ளிவிட்டது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த வயதான ரசிகரை நாகர்ஜூனா அழைத்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது, மீண்டும் வைரலானது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 50வது படம் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான நாகர்ஜூனா கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. குபேரா படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், அந்த நட்பை, பழக்கத்தை மறக்காமல் இந்த இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனா கலந்துக்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





