நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் நடிகர் பிரபு. 1980களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதலில் வில்லத்தனமாக சில கேரக்டர்களில் நடித்த பிரபு, பிறகு கதாநாயகன் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சிவாஜி மகன் என்ற அடையாளத்துடன் வந்த பிரபு, நல்ல நடிகராகவும் தன்னை நிரூபித்தவர்.
சின்ன பூவே மெல்லப் பேசு, பிள்ளைக்காக,. அக்னி நட்சத்திரம், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், சின்னதம்பி பெரியதம்பி என நடிகர் பிரபு நடித்த பல படங்கள் வெற்றி பெற்ற நிலையில், முன்னணி நாயகர்களில் ஒருவராக மாறினார் பிரபு. பி வாசு இயக்கத்தில் நடிகர் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்த சின்னதம்பி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தமிழ்நாட்டில் சில தியேட்டர்களில் இந்த படம் 365 நாட்கள் ஓடியதாக கூறப்படுகிறது.
பிரபு தொடர்ந்து முன்னணி ஹீரோவாக நடித்த வகையில் சின்னதம்பி அளவுக்கு பிறகு எந்த படமும் பிரபுவுக்கு பெரிய வெற்றிப் படங்களாக அமையவில்லை. கிழக்கு கரை, பாண்டித்துரை, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக பிரபுவுக்கு அமைந்தன.
இப்போதும் பிரபு நடித்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். அவரது மகன் விக்ரம் பிரபுவும் ஒரு இளம் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். நடிகர் பிரபுவின் மனைவி புனிதா, சொந்த அக்கா மகள்தான். சமீபத்தில்தான் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றுள்ளார். அப்போது நடிகர் பிரபு குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், நான் 16 வயதில் இருந்தே நடிகர் பிரபுவை காதலிக்கிறேன். இப்போதும் அவர் எனக்கு பிடித்த டார்லிங் தான். இந்த விஷயம் அவரது மனைவி புனிதா அக்காவுக்கே தெரியும்.
பாலைவன ரோஜாக்கள் படத்தை பார்த்த போதே பிரபுவின் நடிப்பை பார்த்து மெய் சிலிர்த்து போய்விட்டேன். அப்போது முதல் பிரபு மீது அளவு கடந்த காதல். சுயம்வரம் படத்தில் நடித்ததே அவருக்கு ஜோடி என்பதால்தான். ஆம்பள படத்தில் நடித்த போது, பிரபுவை நன்றாக சைட் அடித்தேன். அவரது சின்னவீடாக போகவும் நான் ரெடி என்பதை, பிரபுவிடம் நேரடியாகவே சொல்லி விட்டேன். அப்படி ஒரு அழகில் என்னை அவர் என்னை மயக்கி விட்டார் என்று கூறியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்.






