தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் படம் மூலம், கடந்த 1975ம் ஆண்டில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். சிவாஜி ராவ் என்று அவரது இயற்பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றியவர் இயக்குனர் கே பாலசந்தர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்த நடிகர் ரஜினிகாந்தை சினிமாவில் நடிக்க போ என்று சென்னைக்கு அனுப்பி வைத்தவர் அவரது நெருங்கிய நண்பர் ராவ் பகதூர்.
இதையடுத்து தமிழ்நாட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் கே பாலசுந்தர் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். துவக்கத்தில் சில படங்களில் நடித்த ரஜினிகாந்த் பெரிய கவனம் பெறவில்லை. ஆனால் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சப்பாணி கேரக்டரில் கமலும், பரட்டையன் கேரக்டரில் ரஜினியும், மயிலு கேரக்டரிலும் ஸ்ரீதேவியும் இந்த படத்தில் வாழ்ந்திருந்தனர். தொடர்ந்து ரஜினியும் கமலும் பல படங்களில் இணைந்து நடித்தனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் நடிப்பில் அவர்களது படங்கள் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையிலும், அவர்களது சம்பளம் உயரவில்லை. இதனால் இனி தனித்தனியாக நடித்தால் தான் சினிமாவில் உயரமுடியும். அதிக சம்பளம் பெற முடியும் என்ற முடிவெடுத்த இருவரும் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர். இன்று ரஜினி கமல் இருவருமே தமிழ் சினிமாவில் இரண்டு சிகரங்களாக இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.
பொதுவாக ஒவ்வொரு மனிதருக்கும் ஏதாவது சில சென்டிமென்ட் இருக்கும். அந்த சென்டிமென்டை அவர்கள் எப்போதுமே பின்பற்றுவதாக இருப்பார்கள். குறிப்பாக ஒரு சிலர், ஒரு செயலை செயல் தொடங்குவதற்கு முன்பு குறிப்பிட்ட கோயிலுக்கு சென்று வருவார்கள். அல்லது குறிப்பிட்ட நபர்களை சந்தித்து வருவார்கள். இப்படி ஏதேனும் சில சென்டிமென்டை அவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள்.
அதுபோல் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சென்டிமென்ட் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவர் நடித்த புதிய படம் ரிலீஸ் ஆகும் நாளில், அவர் தன்னுடைய அறைக்கு சென்று படுத்து தூங்கி விடுவார். அந்த படம் ரிலீசாகி படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தால் மட்டுமே அவரை போன் செய்து வீட்டில் இருப்பவர்கள் எழுப்ப வேண்டும். இல்லையென்றால், படம் சரியாக போகவில்லை நெகட்டிவ் விமர்சனங்கள் வருகிறது என்றால், ரஜினிகாந்துக்கு போன் செய்யக்கூடாது.
அப்படி போன் எதுவும் செய்யாத பட்சத்தில் அவராகவே தூக்கம் களைந்து விழித்து வெளியே எழுந்து வருவார். அப்போது இந்த படத்துக்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என்பதை அவரே புரிந்து கொள்வார். இதை நீண்ட ஆண்டுகளாகவே அவர் பின்பற்றி வருகிறார். சமீபத்தில் தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் ரிலீசான போதும், அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் தன் அறையில் சென்று தூங்கிவிட்டாராம். அதன் பிறகு படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் அவருக்கு போன் செய்த பிறகு, மகிழ்ச்சியாக எழுந்து வந்தாராம். இப்படி ஒரு தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.





