தமிழ் சினிமாவில் சில நடிகர் நடிகைகள் திருமண வயது வந்து பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர். இதில் சிலருக்கு 40, 50 வயது என கடந்து முதுமையை நெருங்கிக்கொண்டு இருக்கின்றனர். இப்படியே இன்னும் சில ஆண்டுகள் போனால், திருமண வாழ்க்கை என்பதே இல்லாமல் போய்விடும் சூழலில் வாழ்கின்றனர்.
நடிகைகளில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, திரிஷா, பூணம் பஜ்வா, நக்மா, கிரண், தபு, கோவை சரளா உள்ளிட்டோர் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கின்றனர். அதே போல் விஷால், சிலம்பரசன் போன்றவர்களும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகின்றனர்.
அதே போல் நடிகர் நட்டி என்கிற நடராஜனும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை,. நட்டி தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக நடிகராக இருந்து வருகிறார். பல படங்களில் நடித்தும் இருக்கிறார். அவர் நடிகராக முதலில் அறிமுகமான படம் மிளகா. காமெடி கலந்த ஆக்சன் படமாக இது இருந்தது.
தொடர்ந்து சதுரங்க வேட்டை படத்தில் மோசடி ஆசாமியாக அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து முத்துக்கு முத்தாக படத்தில் பள்ளி ஆசிரியர் கேரக்டரில் நட்டி நடிப்பு சிறப்பாக இருந்தது. கர்ணன் படத்தில் போலீஸ் எஸ்பி கேரக்டரில் வில்லன் நடிப்பில் மிரட்டி இருந்தார். நம்ம வீட்டுப்பிள்ளை, சமீபத்தில் வெளியான பிரதர் படத்திலும் நட்டி சிறப்பாக நடித்திருந்தார்.
நட்டி தமிழ் மற்றும் இந்தி, தெலுங்கு படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார். சினிமாவில் நடிப்பதை காட்டிலும் ஒளிப்பதிவாளராக இருப்பதே அவருக்கு அதிக ஆர்வமும், விருப்பமும் உள்ளது. விஜய் நடித்த யூத், புலி படங்களின் ஒளிப்பதிவாளர் நட்டிதான்.
கடந்த 1971ம் ஆண்டில் பிறந்த நட்டிக்கு தற்போது 53 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய நட்டி, சினிமா துறையில் படப்பிடிப்பு தளத்துக்கு முதலில் வருகிற நபரும், கடைசியாக போகிற நபரும் ஒளிப்பதிவாளர்தான். இந்த மாதிரி சூழ்நிலையில் கல்யாணம் செய்துக்கொண்டால், அவங்க ஒரு எதிர்பார்ப்புல இருக்கிற போது அதை நம்மால் முழுசா கொடுக்க முடியாது என்று நான் பயந்தேன். அதனால் தனிமையில் இருந்துவிடலாம் என்று முடிவெடுத்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.





