- Advertisement -
நடிகர் நட்டி நடராஜ் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் என்னோட வாழ்க்கையில 2 தடவை கோர்ட் படி ஏறி இருக்கேன். ஒன்னு நான் ஸ்கூல் படிக்கும்போது பஸ் படியில தொங்கிட்டுப் போனேன்னு போலீஸ் எங்களை பிடித்து கோர்ட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. ஜட்ஜ் என்னை பாத்து 10 ரூபா பைன் கட்டிறியான்னு கேட்டார். என்கிட்ட 3 ரூபா இருக்குன்னு சொன்னேன். சரி நானே பைன் கட்டிடறேன், நல்லா படி தம்பின்னு போக சொல்லிட்டார். அப்புறம் 2 வருஷம் முன்னாடி ஹெல்மெட் போடாம பைக்குல போனேன். போலீஸ் நிப்பாட்டினாரு. நீங்க நடிகர்ன்னு தெரியும் அதற்காக உங்கள விட முடியாதுன்னு கோர்ட்ல வந்து பைன் கட்டிட்டு போங்கன்னு சொன்னார். நீங்களே இப்படி பண்ணலாமான்னு ஜட்ஜ் ஐயா கேட்டுட்டு பைன் கட்டீட்டு போங்கன்னு சொன்னாரு என்று நடிகர் நட்டி கூறியிருக்கிறார்.





