- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்த புலி படம் வெற்றி பெறாமல் போனதற்கு இதுதான் காரணம், அதை சொல்ல மறந்துட்டாங்க...

விஜய் நடித்த புலி படம் வெற்றி பெறாமல் போனதற்கு இதுதான் காரணம், அதை சொல்ல மறந்துட்டாங்க – நடிகர் நட்டி சொன்ன சீக்ரட்!

- Advertisement -

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான படங்கள் இம்சை அரசன் 23ம் புலிகேசி அறை எண் 305ல் கடவுள் புலி இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் போட் உள்ளிட்ட படங்களாகும். இந்த படங்களை பார்த்தாலே இயக்குனர் மிகவும் நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பது தெள்ளத் தெளிவாகி விடும். இதில் அறை எண் 305ல் கடவுள் படத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்திருந்தார்.

காமெடியில் கலக்கிய நடிகர் வடிவேலுவை முதலில் இம்சை அரசனாக ஹீரோவாக காட்டியவர் சிம்புதேவன்தான். அடுத்து காமிக்ஸ் கதை போல ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படமும் பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் வெளியான போட் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

ஆனால் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த புலி படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதில் நடிகை ஸ்ரீதேவி ஸ்ருதிஹாசன் ஹன்சிகா மோத்வானி பிரபு சுதீப் தம்பி ராமையா ரோபோ சங்கர் கருணாஸ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தும் படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறாமல் போனது.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் நட்டி கூறியதாவது, நான் யூத் படத்தில் ஒளிப்பதிவாளராக விஜயுடன் பணிசெய்தேன். அதே போல் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படத்திலும் ஒளிப்பதிவாளராக இருந்தேன். வழக்கமாக காதல், அதிரடி சண்டை படங்கள் என நடித்த விஜய், சற்று மாறுபட்ட கதையில் நடிக்க விரும்பிதான் புலி படத்தில் நடிக்க ஓகே சொன்னார்.

- Advertisement -

உண்மையில் புலி படம் குழந்தைகளுக்கான படம். விஜய் குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். குழந்தைகளுக்கும் விஜயை ரொம்ப பிடிக்கும் என்பதால் புலி படத்தில் குழந்தைகளுக்கான பல விஷயங்களை கொண்டு வந்தோம். அதற்காகவே பல காட்சிகள் புலி படத்தில் கதையோடு சிம்புதேவன் கொண்டு வந்திருந்தார்.

அதனால்தான் கட்டை விரல் உயரத்தில் மனிதர்கள், பேசும் கிளிகள், பச்சை தவளை ஒற்றைக்கண் மனிதன் என குழந்தைகள் ரசிக்கும் காட்சிகள் அதிகம் இருந்தன. ஆனால் படம் ரிலீஸான நாளில் முதல் நாளில் படம் பார்த்த ரசிகர்கள், இதை விஜயின் அதிரடி ஆக்சன் படமாக கருதி விட்டனர். இது குழந்தைகளுக்கான படம் என்பதை முதலிலேயே சொல்லி இருந்தால் புலி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும் என்று நடிகர் நட்டி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்