- Advertisement -
Homeபொழுதுபோக்குவெளியூரில் படப்பிடிப்பு… தாக்க வந்த கும்பல்… அடிக்கு பயந்து அறைக்குள் பதுங்கிய காமெடி நடிகர் -...

வெளியூரில் படப்பிடிப்பு… தாக்க வந்த கும்பல்… அடிக்கு பயந்து அறைக்குள் பதுங்கிய காமெடி நடிகர் – காப்பாற்றிய சதுரங்க வேட்டை பட நாயகன்!

- Advertisement -

திரைப்பட ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணிபுரிந்தவர் நட்டி என்கிற நடராஜ். பிறகு பல படங்களில் ஹீரோ வில்லன் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நட்டிக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த படம் சதுரங்க வேட்டை. மிளகா முத்துக்கு முத்தாக நம்ம வீட்டுப்பிள்ளை மகாராஜா என பல படங்களில் நட்டி நடித்திருக்கிறார். யூத் புலி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளரும் நட்டிதான்.

இன்னும் 10 நாட்களில் வருகிற 20ம் தேதி தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ் சினிமாவில் துருவ் விக்ரம் நடித்த பைசன் காளமாடன் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் மற்றும் ஹரீஷ் கல்யாண் நடித்த டீசல் ஆகிய 3 படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்த படங்களுடன் கம்பி கட்ன கதை என்ற படமும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர்கள் நட்டி சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். சென்னையில் கம்பி கட்ன கதை படவிழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம்புலி பேசியதாவது, நான் இயக்குனராக இருந்தேன். பின்னர் சூழ்நிலை காரணமாக நான் கடவுள் படத்தில் காமெடி நடிகராக நடித்தேன்.

அந்த படம் வந்த பிறகு என் வாழ்க்கை மாறும். தினமும் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக ஆவேன் என்று என் மனைவியிடம் பெருமையாக சொன்னேன். ஆனால் எனக்கு படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு வரவில்லை. 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேளுங்க என்று என் மனைவி சொன்னார். நான் 2 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வந்துவிட்டேன். ஆனால் எனக்கு படங்களில் நடிக்க சரிவர வாய்ப்புகள் வரவில்லை.

- Advertisement -

அப்புறம் மாயாண்டி குடும்பத்தார் படம் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் மிளகா என்ற படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. என்னை நேரில் பார்த்து பேசிய நட்டி டக்கென 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தார். அந்த செயலால் மிரண்டு விட்டேன். அதேபோல் ஒரு சமயம் வெளியூர் படப்பிடிப்பு தளத்தில் என்னை அடிக்க சிலர் வந்தார்கள். நான் அவர்களுடன் போட்டோ எடுக்க வாய்ப்பு தரவில்லை என்ற கோபத்தில் கும்பலாக தாக்க வந்தார்கள்.

நான் ஓடிப்போய் ஒரு அறையில் பதுங்கி விட்டேன். எனக்காக தைரியமாக அவர்களிடம் சண்டை போட்டவர் நட்டிதான். இந்த படத்தில் எங்களது காம்பினேஷன் நன்றாக இருக்கும். படம் பார்த்துவிட்டு சிரிப்பீர்கள். நல்லவரான நட்டி பல படங்களில் ஏமாற்றுபவராக நடிக்கிறார். அதுதான் சினிமா என்று நடிகர் சிங்கம் புலி கம்பி கட்ன கதை பட விழாவில் உருக்கமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்