- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகப்பட்ட டென்சனில் இருந்தேன்… அதனால் அப்படி பேசிவிட்டேன் - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்!

ஏகப்பட்ட டென்சனில் இருந்தேன்… அதனால் அப்படி பேசிவிட்டேன் – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் தயாரிப்பாளர் இயக்குனர் கவிஞர் என பன்முகத் தன்மை கொண்டவர். தெலுங்கில் அவர் உஸ்தாத் பகத்சிங் என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பவன் கல்யாண் ஸ்ரீலீலா ராசி கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

உஸ்தாத் பகத்சிங் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று முன்தினம் ஐதராபாத்தில் விமரிசையாகநடந்தது. அப்போது அந்த விழாவில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் விழா மேடையில் பேசினார். அப்போது நான் ஒரு நாயுடு பையன் என்று தனது சாதி பெயரை குறிப்பிட்டு பேசினார். மேலும் எனக்கு தெலுங்கில் சரியாக பேச வராது. தமிழ்தான் நன்றாக பேசத் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

- Advertisement -

தன்னை தெலுங்கு பேசும் நாயுடு என்று சாதி அடையாளமாக நடிகர் பார்த்திபன் குறிப்பிட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இதுகுறித்து ரசிகர்கள் பலரும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பார்த்திபன் ஒரு வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதில் பார்த்திபன் கூறியிருப்பதாவது, என்னுடைய பேச்சு யார் மனதையாவது உண்மையிலேயே கீறி புண்படுத்தி இருந்தால் வருத்தம் தோய்ந்த மன்னிப்பை தெரிவித்து இந்த பிரச்சனையை விட்டுவிட்டு இப்பொழுதை நற்பொழுதாக்கிக் கொள்ள வேண்டிக் கொள்கிறேன். நான் வாழ்க்கைப்பட்டு இருப்பது தமிழுக்கு. சோறு சுகம் யாவும் தமிழே தந்தது. போகும் வரை சொர்க்கம் தமிழே. இதை என்றும் எங்கும் ஏன் உலகெங்கும் பெருமையாக உரக்கச் சொல்வேன்.

- Advertisement -

என் தாய்மொழி தெலுங்கு தான் என்பதை அங்கு மட்டுமல்ல எங்கும் இன்று மட்டுமல்ல நேற்று முன்தினமும் சொல்லி இருக்கிறேன். தமிழ் உயர்ந்ததும் உன்னதமானது மட்டுமல்ல. அன்பும் கருணையும் நிறைந்தது. உஸ்தாத் பகத்சிங் விழாவில் மிகுந்த டென்ஷன், பதட்டத்தில் இருந்ததால் தெலுங்கில் எனக்கு சரியாக பேச வராது. வார்த்தைகளை கவனமாக களமிறக்க முடியாததால் வேர்க்க விறுவிறுக்க பேசிவிட்டு இறங்கி விட்டேன்.

எனவே இதை ஆரம்பித்தவர்களே அன்போடு முடித்து விடுங்கள் என்று பார்த்திபன் கேட்டுக் கொண்டுள்ளார். இப்போதுதான் சமீபத்தில் நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு பார்த்திபன் வீடியோ வெளியிட்டார். இப்போது தன்னுடைய ஜாதி குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு பார்த்திபன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது என்ன நடிகர் பார்த்திபனுக்கு மன்னிப்பு கேட்கும் வாரமா? என்று அவரது ரசிகர்கள் அவரது பாணியிலேயே கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்