- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை ரம்பாவை விட்டு பிரிந்த கணவர் தமன்னாவை திருமணம் செய்யப் போவதாக பரவிய தகவல், பயங்கர...

நடிகை ரம்பாவை விட்டு பிரிந்த கணவர் தமன்னாவை திருமணம் செய்யப் போவதாக பரவிய தகவல், பயங்கர அப்செட்டில் ரம்பா – குழப்பத்தில் கோலிவுட்

- Advertisement -

நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகையாக கடந்த 1990களில் வலம்வந்தவர். உள்ளத்தை அள்ளித்தா, சுயம்வரம், ராசி, சுந்தரபுருஷன், அருணாச்சலம், காதலா காதலா, குங்குமப்பொட்டுக் கவுண்டர் என பல படங்களில் நடித்தவர். சுந்தர் சி படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்த ரம்பா, இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். வளர்ந்த அவரது மகள்களின் புகைப்படங்களுடன் சமீபத்தில் தனது இல்லத்தில் நடந்த பூஜை படங்களை ரம்பா, இணையத்தில் பரவ விட்டிருந்தார். அது வைரலானது.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ரம்பாவின் கணவர் தொழிலதிபரான இந்திரகுமார், ரம்பாவை விட்டு பிரிந்து விட்டதாகவும், அவர் இப்போது தமன்னாவுடன் நெருக்கமான நட்பில் இருப்பதாகவும், இருவரும் மிக விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் தகவல் பரவி வருகிறது. இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரம்பா, இன்ஸ்டாகிராமில் என் கணவர் என்னை பின்தொடரவில்லை. தமன்னாவை தான் பின்தொடர்கிறார் என்று குறிப்பிட்டுச் சொன்னார். சமீபத்தில் இந்திரகுமார் துவங்கிய மேஜிக் ஹோம் என்ற ஷோரூம் நிறுவனத்தை திறந்து வைக்க தமன்னா வந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

வரும் பிப்ரவரி 9ம் தேதி இலங்கையில் ஒரு இசைநிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த இசைநிகழ்ச்சியில் ஹரிஹரன் போன்ற பெரிய பாடகர்கள் பங்கேற்று பாட உள்ளனர். இலங்கையின் யாழில் நார்த்தென் யூனி நடத்தும் இந்த கான்செர்ட்டில் பங்கேற்க தமன்னாவும் வருகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த விழாவில் ரம்பாவும் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில், தனது கணவருடன் தொடர்பில் இருக்கும் தமன்னாவிடம் அதுபற்றி பேச ரம்பா திட்டமிட்டுள்ளதால், அந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் பயங்கர மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தனது கணவருடன், தமன்னா தொடர்பில் இருப்பதை தெரிந்துக்கொண்ட நிலையில், வளர்ந்த பிள்ளைகள் இருக்கும்போது இப்படி கணவர் நடந்துக் கொள்வதால் ரம்பா பயங்கர அப்செட்டில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்