- Advertisement -
Homeபொழுதுபோக்குஎமோஷனலான விஷயம்தான் இது, அதுக்காக பெத்தவங்க அதை தவிர்க்க முடியுமா? - நடிகர் பிரபுதேவா சொன்னதை...

எமோஷனலான விஷயம்தான் இது, அதுக்காக பெத்தவங்க அதை தவிர்க்க முடியுமா? – நடிகர் பிரபுதேவா சொன்னதை ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா?

- Advertisement -

நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தமிழில் நடன இயக்குனராக பல படங்களில் பணிசெய்திருக்கிறார். நடிகர் விஜய் நடித்த போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய டைரக்டர் பிரபுதேவாதான். இந்தியில் அக்‌ஷய்குமார் நடித்த படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார்.

எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களையும் டைரக்ட் செய்தவர் பிரபுதேவா தான், ஒரு நடிகராக, நடன இயக்குனராக மட்டுமின்றி ஒரு இயக்குனராகவும் பிரபுதேவா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது அண்ணன் ராஜூ சுந்தரம் நடன இயக்குனர். இவரது அப்பா மாஸ்டர் சுந்தரம் நடன இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் பிரபுதேவாவும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். தமிழில் பல படங்களில் நாயகனாக நடித்த நிலையில், பிறகுதான் அவர் டைரக்டராக மாறினார். பிரபுதேவா நடித்த காதலன், லவ் பேர்ட்ஸ், ராசய்யா, விஐபி, காதலா காதலா, எங்கள் அண்ணா போன்ற பல படங்களை சொல்லலாம்.

இப்போது நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் ஆகிய பணிகளோடு அவ்வப்போது நடிகராகவும் பிரபுதேவா நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பஹீரா, குலேபகாவலி, தேர் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு நடிகர் பிரபுதேவாவின் மூத்த மகன், மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அந்த சம்பவத்தால் மிகவும் மனமுடைந்து போன நடிகர் பிரபுதேவா, சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதையும் படங்களில் நடன இயக்குனராக பணிபுரியாமலும் இருந்தார். பிறகு அந்த மனச்சுமையில் இருந்து மீண்டு வந்து சினிமாவில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரபுதேவா ஒரு நேர்காணல் பேசுகையில், நான் என் பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்துள்ளேன். ஆனால் இந்த தவறை மட்டும் வாழ்க்கையில் யாரும் செய்து விடாதீர்கள். பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்தால், அவர்களை சின்ன விஷயம் பாதித்தால் கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர்களை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற யோசனையில் நம்மால் ப்ரீயாக வாழ முடியாது. அதனால் பிள்ளைகள் மீது அதிக பாசம் வைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்