- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த கட்சியுடன் விஜய் சேர்ந்தால் தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும் - நடிகைகளால் தவெகவுக்கு ஆபத்து...

அந்த கட்சியுடன் விஜய் சேர்ந்தால் தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும் – நடிகைகளால் தவெகவுக்கு ஆபத்து – சர்கார் பட அரசியல் வில்லன் நடிகர் அட்வைஸ்!

- Advertisement -

இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு படத்தில் ஜவுளிக்கடை ஓனராக நடித்த நடிகர் பழ கருப்பையா நடிப்பை யாராலும் மறக்க முடியாது. மிக அற்புதமான ஒரு நடிப்பை தந்திருந்தார். அதேபோல் சர்கார் படத்தில் முதலமைச்சராக பழ கருப்பையா நடித்திருந்தார். விஜய்க்கு அரசியல் வில்லனாக நடிப்பில் அசத்தியிருந்தார்.

நடிகர் பழ கருப்பையாவும் ஒரு நிஜ அரசியல்வாதிதான். முன்னாள் எம்எல்ஏ என்பதும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக தமிழ்நாடு அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய் குறித்து நடிகர் பழ கருப்பையா நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் பழ கருப்பையா கூறியதாவது, நடிகர் விஜயிடம் எந்த கொள்கையும் இல்லை. திமுக அதிமுகவுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் மாற்றுக் கட்சியாக வந்த மூன்றாவது அணி ஒதுக்கப்பட்டன. மாற்றுக் கட்சிகள் வீழ்த்தப்பட்டன. விஜய்யும் அதிமுகவும் கூட்டணி அமைத்தால் தான் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும். இல்லாவிட்டால் மிகவும் சிரமம்.

கடைசி நேரத்தில் அதிமுக – திமுக என்ற நிலைமை வந்துவிடும். விஜய் மக்களின் சிந்தனையை விட்டு விலகிவிடுவார். மாநாட்டு மேடையில் விஜய் எம்ஜிஆர் பற்றி பேசுகிறார். விஜயகாந்த் பற்றி பேசுகிறார். அதைத் தவிர இந்த கூட்டம் கலைந்து செல்லும்போது புதிய கருத்தை பெற்றதா? அண்ணா மூன்று நாள் மாநாட்டை நடத்துவார். தொண்டர்கள் கிளம்புகிறபோது திராவிட நாடு என்று அவர்களது மனதிலே சிந்தனையை விதைத்து விடுவார்.

- Advertisement -

ஆனால் விஜயிடம் ஒரு கருத்துமில்லை. விஜய்க்கு சிறுபான்மையினருடைய வாக்குகள் வரும். அது ஓரளவுக்கு திமுகவை பாதிக்கும் என்றாலும் கூட திமுகவிடம் பணம் இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. கூட்டணிகள் இருக்கின்றன. இந்த நிலையில் வலிமையான ராவண வதம் வேண்டும் என்றால் ஸ்டாலினுடைய ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் அதற்கேற்ப விஜய் தன்னை வலிமையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

விஜய் விஜய் இன்னும் கடுமையாக பேச வேண்டும். இங்கே என்னென்ன தப்புகள் நடக்கிறது, இந்த ஆட்சியில் என்னென்ன மாற்றம் வர வேண்டும் என்பதை எல்லாம் விஜய் பேச வேண்டும். திமுகவினர் மூன்று நான்கு நடிகைகளை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். விஜய் முதல் நாள் சனிக்கிழமை ஒரு இடத்திற்கு சென்றால் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அந்த நடிகைகள் அங்கே செல்வார்கள். இவருக்கு கூடிய கூட்டம் அந்த நடிகைகளுக்கும் கூடும். விஜயின் கூட்டத்தை இன்னொரு கூட்டத்தால் பீக் அவுட் செய்துவிடுவார்கள் என்று நடிகர் கருப்பையா அந்த நேர்காணலில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்