கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடித்த இந்த படம், ஓரளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி, காதல் கலந்த இந்த படம், பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. ஜெயம் ரவி, யோகி பாபுவுக்கும் இந்த படம் நல்ல வெற்றியை தந்தது.
இதையடுத்து பிரதீப் ரங்கநாதன், லவ்டுடே என்ற படத்தை இயக்கி, அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இவானா, சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம், மிகப்பெரிய அளவில் வெற்றிப் படமாக அமைந்தது. செல்போனை மையப்படுத்தி, அதில் உள்ள விஷயங்களை டிரண்டிங் ஆக்கி பிரமாதமான திரைக்கதையில் இந்த படத்தை தந்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்.
இந்த படத்தில், காதலர்களின் செல்போன்களை ஒருநாள் மாற்றிக் கொள்வது, உத்தமன் பிரதீப் கேரக்டரில் பிரதீப் ரங்கநாதன், யோகிபாபு, இவானாவின் பெஸ்டியாக மாமாகுட்டி போன்ற சில விஷயங்கள், படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. காமெடியும், காதலும் நிறைந்த இந்த படத்தில் டீஜ் ஏஜ் வயதினரின் உணர்வுகளை மிக அழகாக சொல்லியிருந்தார் பிரதீப் ரங்கநாதன்.
இப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, மிஷ்கின் உள்ளிட்டோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த படத்தில் நடிக்க பிரதீப் ரங்நாதனுக்கு ரூ. 15 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில், தனது அசோசியேட் டைரக்டரை, இயக்குனராக்கி அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அதற்காக பணியை அவரை உள்ளடி வேலையாக செய்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துளளது. அதாவது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க, ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் கமிட் ஆகியிருந்தார்.
ஆனால் இப்போது டைரக்ட் செய்வதை காட்டிலும், ஹீரோவாக நடிப்பதில் ஆர்வமாக உள்ள பிரதீப் ரங்கநாதன், கோமாளி படத்தில், தன்னிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த கீர்த்தீஸ்வரனை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பேச வைத்து, அந்த கதையில் ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தீஸ்வரன் அந்த படத்தை டைரக்ட் செய்கிறார். கோமாளி படத்தில் பணிசெய்த போதே, இந்த கதையை பிரதீப்பிடம் கீர்த்தீஸ்வரன் சொல்லி இருக்கிறார். கதை மிகவும் பிடித்த நிலையில், இப்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் அவரை டைரக்டராக்கி அதே படத்துக்கு அவரே ஹீரோவாகி விட்டார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டார் பிரதீப் ரங்கநாதன்.





