- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரியர் எல்லாம் கொரியர் மாதிரி வந்துகிட்டே இருக்கும், அது மாஸ் இல்லே… எது மாஸ் தெரியுமா?...

அரியர் எல்லாம் கொரியர் மாதிரி வந்துகிட்டே இருக்கும், அது மாஸ் இல்லே… எது மாஸ் தெரியுமா? – வெளிப்படையாக பேசிய நடிகர் பிரதீப் ரங்கநாதன்!

- Advertisement -

கோமாளி லவ்டுடே படங்களை தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி 3 நாட்களில் ரூ. 50 கோடி வசூலை கடந்துள்ள படம் டிராகன். இந்த படத்தில் 48 அரியர் வைக்கும் கல்லூரி மாணவர் கேரக்டரில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மிஷ்கின் கெளதம் மேனன் கேஎஸ் ரவிக்குமார் தேனப்பன் கயாடு லோஹர் மரியம் ஜார்ஜ் இந்துமதி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கேமியோ ரோலில் லவ்டுடே நாயகி இவானாவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளியில் சிறந்த மாணவனாக இருக்கும் பிரதீப் ரங்கநாதன், கல்லூரியில் அடாவடி மாணவனாக 48 அரியர்ஸ் வைக்கும் கேரக்டரில் அசத்தலான நடிப்பை தந்திருப்பார். ஒரு கட்டத்தில் அந்த 48 அரியர்ஸ் பேப்பர் எழுதி பாஸ் செய்தால் மட்டுமே அவரது வாழ்க்கையில் பல சிக்கல்களை தீர்க்க முடியும் என்ற நிலையில் அவரது போராட்டங்களே படத்தை சுவாரசியப்படுத்துகின்றன. டிராகன் படத்துக்கு பெரிய வெற்றியை தேடித் தந்திருக்கிறது.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, டிராகன் என்ன சொல்றான், அரியர் எல்லாம் கொரியர் மாதிரி வந்துட்டே இருக்கும். நாம சைன் பண்ணி அனுப்பிட்டே இருப்போம். ஆனா பிரதீப் என்ன சொல்றான். அரியர் எல்லாம் மாஸ் இல்லே, படிச்சா தான் மாஸ். எங்க அப்பா எங்களை கஷ்டப்பட்டு படிக்க வெச்சதால்தான் எனக்கு கோமாளி ஒரு படத்தை டைரக்ட் பண்ணவே முடிஞ்சுது.

பர்ஸ்ட் டைம் ஜெனரசேனுக்கு, பர்ஸ்ட் டைம் கிராஜூவேட்டுக்கு அது எவ்வளவு முக்கியம் என்று தெரியும். பிரதீப் டுவெல்த்துல 98 பர்சன்டேஜ் வாங்கி காலேஜ்ல 80 பர்சன்டேஜ் வாங்கி ஐடியில் பிளேஸ் ஆகி ஒன்றரை வருஷம் வேலை பார்த்து அப்ப கிடைச்ச சனிக்கிழமை ஞாயிற்று கிழமைகளில் குறும்படம் எடுத்து நிறைய புக்ஸ் படிச்சு நிறைய டுட்டோரியல் படிச்சு நான் இங்க வந்திருக்கேன்.

படிப்பு லேர்னிங் கத்துக்கறது அதுதான் முக்கியம். அதுதான் இம்பார்ட்டென்ட். இன்னொரு விஷயம் அம்மா அப்பா பத்தி. சிலர் முன்னாடி பார்த்து சிரிப்பாங்க, பின்னாடி போய் முறைப்பாங்க. ஆனா முன்னாடி பின்னாடி எல்லோத்துலேயும் நம்மள பார்த்து சிரிக்கறவங்க, நாம நல்லா இருக்கணும்ன்னு நினைக்கறவங்க அம்மா அப்பா மட்டும்தான் என்று பிரதீப் ரங்கநாதன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

சற்று முன்