- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பேரை சொன்னதால்தான் அந்த காட்சியில் தைரியமாக நடித்தேன், உண்மையை போட்டுடைத்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்!

விஜய் பேரை சொன்னதால்தான் அந்த காட்சியில் தைரியமாக நடித்தேன், உண்மையை போட்டுடைத்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்!

- Advertisement -

கோமாளி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் ஜெயம் ரவி காஜல் அகர்வால் கே எஸ் ரவிக்குமார் யோகி பாபு ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து லவ் டுடே என்ற படத்தை பிரதீப் ரங்கநாதன் டைரக்ட் செய்தார். அவரே கதாநாயகனாகவும் நடித்தார்.

லவ்டுடே படத்தில் சத்யராஜ் ராதிகா சரத்குமார் இவானா யோகி பாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது பிரதீ்ப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்திலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

வரும் 21ம் தேதி டிராகன் படம் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களிலுமே பிரதீப் ரங்கநாதன் லிப்லாக் முத்தக் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, என்னை பொருத்தவரை இந்த 2 படங்களிலுமே லிப்லாக் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தான் சொன்னேன்.

அது போன்ற காட்சிகளில் நடித்தால் பேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்றும் கூறினேன். ஆனால் எல்ஐகே படத்தின் டைரக்டர் விக்னேஷ் சிவன், அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. அப்படி என்றால் அனிமல் படம் எப்படி ஓடியது, இப்போது எல்லாம் பேமிலி ஆடியன்ஸ் கூட இது போன்ற காட்சிகளை பார்க்க விரும்புகிறார்கள் என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தி அந்த முத்தக் காட்சியில் நடிக்க வைத்தார்.

அதே போல் டிராகன் படத்திலும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து என்னை லிப்லாக் முத்தக் காட்சியில் நடிக்குமாறு கூறினார். நான் மறுத்த போது அவர், மாஸ் நடிகர் விஜய் லியோ படத்தில் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார். அதனால் கதைக்கு அவசியம் என்றால் அது போன்ற காட்சிகளில் நடிப்பதில் தவறில்லை. அதை பேமிலி ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லி என்னை நடிக்க வைத்தார்.

அந்த வகையில் லிப் லாக் முத்தக் காட்சிகளில் நடிக்க கூடாது என்ற முடிவில் இருந்த என்னை, கதைக்கு அவசியப்படும் போது அது போன்ற காட்சிகளில் நடிக்கலாம் என்று சொல்லி இயக்குனர்கள் விக்னேஷ் சிவன் அஸ்வத் மாரிமுத்து முத்தக்காட்சியில் என்னை நடிக்க வைத்து விட்டனர் என்று நடிகர் பிரதீ்ப் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

சற்று முன்