- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை நான் நிச்சயமாக பார்க்க மாட்டேன், இந்த முறை என் ஓட்டு அவருக்குதான் -...

ஜனநாயகன் படத்தை நான் நிச்சயமாக பார்க்க மாட்டேன், இந்த முறை என் ஓட்டு அவருக்குதான் – பிக்பாஸ் பிரபலம் பிரஜின் ஓபன்டாக்!

- Advertisement -

கடந்த 1990களில் சன் மியூசிக்கில் பிரபல காம்பியராக இருந்தவர் பிரஜின். பிறகு சில சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிரஜின் தனது மனைவி சாண்ட்ராவுடன் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது நடிகர் பிரஜின் பிரஜின் கூறியதாவது, இந்த தேர்தலில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. எனக்கும் அதே ஆசை தான்.

நான் இதுவரை நடந்த தேர்தல்களில் பலருக்கு ஓட்டு போட்டிருக்கிறேன். சில நல்ல விஷயங்கள் நடந்திருக்கலாம். ஆனால் நிறைய விஷயங்கள் நடக்காமலேயே போயிருக்கிறது. அதனால் இந்த முறை ஒரு புதிய வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்கிற எண்ணம் எனக்கு இருக்கிறது. என்னோட ஓட்டு இந்த முறை விஜய்க்கு தான் என்று பிரஜன் கூறினார்.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் லீக்கானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து பேசும் போதும் நடிகர் பிரஜின் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து பிரஜின் கூறுகையில், ஒரு சினிமா நடிகராக இதை நான் மிகவும் கடுமையாக கண்டிக்கிறேன். ஒரு படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பு இணையத்தில் லீக் ஆவது மிகவும் வருத்தமான விஷயம். நான் அந்த படத்தை தியேட்டரில் தான் பார்க்க விரும்புகிறேன். ஆன்லைனில் நிச்சயமாக பார்க்க மாட்டேன் என்றும் கூறினார்.

- Advertisement -

படம் லீக் ஆனதற்கு நடிகர் விஜய் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகளையும் பிரஜின் மறுத்தார். விஜய் மாதிரி ஒரு பெரிய நடிகர் இதை பண்ணுவார் என்பதை நான் நம்பவே மாட்டேன். அவருக்கு அதில் எந்த லாபமும் இல்லை. ஒரு தயாரிப்பாளர் 500 கோடி ரூபாய் செலவு பண்ணி படம் எடுத்திருக்கிறார். அப்படி இருக்கும் போது விஜய் அவரே படத்தை லீக் பண்ணுவார் என்பது சாத்தியமில்லை. இது முழுக்க முழுக்க தவறான குற்றச்சாட்டு என்றும் பிரஜின் கூறியிருக்கிறார்.

மேலும் நடிகர் விஜயின் அரசியல் பயணம் பற்றி பிரஜின் பேசும்போது, விஜய் இளைஞர்களுக்காக பல விஷயங்கள் செய்யணும் என்று சொல்கிறார். அதனால் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம். மாற்றம் வர வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. அதை ஆசை எனக்கும் இருக்கிறது என்றும் பிரஜின்கூறியிருக்கிறார். நடிகர் பிரஜின் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இப்போது வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்