- Advertisement -
Homeபொழுதுபோக்குஅறிக்கையில் தடாலடி… நேரில் பெரிய கும்பிடு - நடிகர் பிரகாஷ் ராஜின் தில்லாலங்கடி அரசியலை பார்த்து...

அறிக்கையில் தடாலடி… நேரில் பெரிய கும்பிடு – நடிகர் பிரகாஷ் ராஜின் தில்லாலங்கடி அரசியலை பார்த்து சிரிக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகராக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பிரகாஷ் ராஜ். ஆரம்பத்தில் இருந்தே அவரது வில்லத்தனமான நடிப்பும் அழுத்தமான டயலாக் டெலிவரியும் ரசிகர்களை அவரது நடிப்பை பாராட்ட வைத்தன. எந்த கேரக்டர் தந்தாலும் அதில் இயல்பான நடிப்பை தருபவர் பிரகாஷ் ராஜ்.

பல படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் மொழி, அபியும் நானும் 60 வயது மாநிறம் உன் சமையலறையில் திருச்சிற்றம்பலம் போன்ற சில படங்களில் குணச்சித்திர நடிப்பில் அசத்தியிருப்பாார். அதே நேரத்தில் விஜயுடன் கில்லி போக்கிரி வில்லு வாரிசு போன்ற படங்களில் வில்லனாக மிரட்டியிருப்பார்.

- Advertisement -

சினிமாவில் நடித்துக்கொண்ட அரசியல் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், அவ்வப்போது மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். மேலும் அவ்வப்போது ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் குறித்தும் கடுமையாக பேசி வருகிறார். அடிக்கடி அறிக்கையும் வெளியிடுகிறார்.

இந்நிலையில் நேற்று நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு நேர்காணலில் பேசுகையில், நடிகர் விஜய் மற்றும் நடிகர் பவன் கல்யாண் இருவரது அரசியல் குறித்து ஒப்பிட்டு பேசியிருந்தார். இருவருக்குமே தெளிவான அரசியல் புரிதல் இல்லை என்றும் கடுமையாக கூறியிருந்தார். இவர்களை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

- Advertisement -

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் வாய்ப்பு கிடைத்திருக்காது. அந்த எரிச்சலில்தான் இப்படி விஜய் குறித்து விமர்சிக்கிறார் என்றும் பிரகாஷ் ராஜ் குறித்த விமர்சனம் எழுந்தது. ஆனால் இப்போது வந்த புதிய தகவலின்படி விஜய் நடித்து வரும் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பையனூர் கொடைக்கானல் பகுதிகளில் நடந்த ஜனநாயகன் படப்பிடிப்பைத் தொடர்ந்து நாளை சென்னையில் மீண்டும் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜயுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. நேரில் விஜயை சந்தித்தால், வாய்ப்புக்காக கும்பிடு போடும் நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் அறிக்கைகளில் மட்டும் தடாலடி காட்டி வருகிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்