- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி படப்பிடிப்பில் முதன் முறையாக அஜீத் குமாரை சந்தித்த போது… அவர் சொன்ன...

குட் பேட் அக்லி படப்பிடிப்பில் முதன் முறையாக அஜீத் குமாரை சந்தித்த போது… அவர் சொன்ன வார்த்தைகள் – நடிகர் பிரசன்னா உருக்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் சிறந்த நடிகர்களில் ஒருவர் பிரசன்னா. அவரது நடிப்பில் எப்போதுமே ஒரு தனித்துவம் நிறைந்திருக்கும். அதே நேரத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படத்தில் கொடூரமான வில்லனாக நீண்ட தலைமுடியுடன் மிரட்டியிருப்பார்.

கஸ்தூரி மான் சீனாதானா 001 சாது மிரண்டால் கண்ணும் கண்ணும் நாணயம் கோவா சென்னையில் ஒரு நாள் அச்சமுண்டு அச்சமுண்டு புலிவால் கல்யாண சமையல் சாதம் துப்பறிவாளன் திருட்டுப் பயலே 2 என பல படங்களில் பிரசன்னா நடிப்பு சிறப்பாக இருக்கும். நடிகை சினேகாவை பிரசன்னா காதல் திருமணம் செய்துக்கொண்டவர்.

- Advertisement -

இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள குட் பேட் அக்லி படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அஜீத்குமாருடன் நடித்தது குறித்து நடிகர் பிரசன்னா சில விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் பிரசன்னா கூறியதாவது, மங்காத்தா படம் அறிவிப்பு வெளியான நேரத்தில், இயக்குனர் வெங்கட்பிரபு என்னை போனில் அழைத்தார். நேரில் அவரை பார்த்த போது, மங்காத்தா படம் பண்றோம். நீ அதில் இருக்கே என்றார். ஏகப்பட்ட சந்தோஷத்தில் அன்று இரவு நாங்கள் பார்ட்டி எல்லாம் பண்ணிட்டோம். அப்புறம் என்னாச்சு என தெரியவில்லை. சில காரணங்களால் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை.

- Advertisement -

அதற்கு பிறகு அஜீத்குமார் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்கிற மாதிரி ஒரு சூழல் வந்து கடைசி நேரத்தில் அது கைநழுவி காணாமல் போய் விடும். அப்படி ஒவ்வொரு முறையும் அஜீத்குமார் சார் கூட நடிக்கிற வாய்ப்பு மிஸ் ஆகும்போதும் நான் ரொம்பவும் வருத்தப்பட்டு இருக்கேன். ஆனால் குட் பேட் அக்லி படத்தில் அந்த கனவு நடந்தே விட்டது.

நான் பர்ஸ்ட் டைம் இந்த படத்தோட ஷூட்டிங் ஷெட்டில் அஜீத் சாரை மீட் செய்தேன். அப்போது நான் ஒரு விஷயத்தை சொல்ல நினைத்து அவரிடம் போன போது அவர் என்னிடம் முதலில் சொன்னது, யப்பா… எவ்ளோ நாளா நாம சேர்ந்து நடிக்கறது தள்ளி தள்ளிப் போய்விட்டது என்றார். மாஸ் ஹீரோவான அவர் அப்படி என்னிடம் சொன்னதை கேட்ட போது மனசுக்கு ரொம்பவும் நெகிழ்ச்சியாகி விட்டது என்று நடிகர் பிரசன்னா உருக்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்