- Advertisement -
Homeபொழுதுபோக்கு6 நாட்களில் அந்தகன் செய்த வசூல் சாதனை, சொல்லி அடித்த கில்லியாக மாறிய டாப் ஸ்டார்...

6 நாட்களில் அந்தகன் செய்த வசூல் சாதனை, சொல்லி அடித்த கில்லியாக மாறிய டாப் ஸ்டார் பிரசாந்த் – 2வது சுற்றில் இனி அதிரடி ஆட்டம் ஆரம்பமா?

- Advertisement -

நடிகர் தியாகராஜனின் மகன் நடிகர் பிரசாந்த். தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தியாகராஜன். இவர் நடிப்பில் வெளியான கொம்பேறி மூக்கன், தீச்சட்டி கோவிந்தன், மலையூர் மம்பட்டியான், நீங்கள் கேட்டவை போன்ற பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன.

அதே போல் தந்தை தியாகராஜனை போல மகன் பிரசாந்தும் நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அவரது நடிப்பில் முதலில் வெளியான படம் வைகாசி பொறந்தாச்சு. அறிமுக நடிகர் போல் இல்லாமல் முதல் படத்திலேயே ஜாலியான அரும்பு மீசை இளைஞனாக பிரசாந்த் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள், மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா, ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் என பிரசாந்த் நடிப்பில் வேற லெவலில் தன்னை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்தார். முன்னணி நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வரத்துவங்கினார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பலத்த ஏமாற்றம், அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய சரிவை ஏற்படுத்தியது. இதனால் இமேஜ் இழந்த நடிகர் பிரசாந்த் சினிமாவை விட்டு விலகினார். அந்த காலகட்டத்தில் நடித்த அவரது படங்களும் சரியாக போகவில்லை.

- Advertisement -

இந்த சூழலில் அந்தாதூன் என்ற இந்தி படத்தை ரீமேக் செய்து பிரசாந்த் அப்பா தியாகராஜன் டைரக்ட் செய்த படம்தான் அந்தகன். கடந்த 2018ம் ஆண்டில் வெளியான அந்ததூன் படம் பெரிய வெற்றி பெற்றதால், அந்த படத்தையே ரீமேக் செய்து அந்தகன் படத்தை உருவாக்கி இருந்தார் தியாகராஜன். இதில் கண் பார்வையற்ற பியானோ இசைக்கலைஞராக பிரசாந்த் நடித்திருந்தார்.

இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் படம் ரிலீஸான முதல் நாளில் இருந்தே இந்த படத்துக்கு பாசிட்டிவ் ஆன வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. கடந்த 9ம் தேதி இந்த படம் வெளியான நிலையில் 6 நாட்களில் இதுவரை ரூ. 5.2 கோடி வசூலை அந்தகன் படம் கடந்துள்ளது. இது பிரசாந்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள நல்ல வரவேற்பை காட்டுவதாக உள்ளது. Actor Prashant

- Advertisement -

சற்று முன்