- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது 52வது பிறந்த நாளில் 55வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் பிரசாந்த் - ஹரி...

தனது 52வது பிறந்த நாளில் 55வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் பிரசாந்த் – ஹரி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரசாந்த் கேரக்டர் அதுதானா?

- Advertisement -

கடந்த 1990களில் டாப் ஸ்டார் நடிகராக இருந்தவர் பிரசாந்த். நடிகர் தியாகராஜனின் மகன். வைகாசி பொறந்தாச்சு படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே மாஸ் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள் திருடா திருடா ராசா மகன் செந்தமிழ் செல்வன் ஜீன்ஸ் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.

தனது திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்னையால், அவருடைய மனைவி கிரஹலட்சுமியை விவாகரத்து செய்தார். பிறகு சினிமாவை விட்டு சற்று விலகியிருந்த நடிகர் பிரசாந்த் இப்போது தி கோட் அந்தகன் படங்கள் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். தி கோட் படத்திலும் அந்தகன் படத்திலும் அவரது நடிப்பு இன்னும் மெருகு குறையாமல் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கிறார். ஏற்கனவே இயக்குனர் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் தமிழ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2002ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. இதில் நாயகியாக சிம்ரன் நடித்திருந்தார். வடிவேலு ஊர்வசி மனோரமா என பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருந்தனர்.

இப்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் ஹரி, நடிகர் பிரசாந்த் கூட்டணி கைகோர்த்திருக்கிறது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ் படத்தை போலவே ஹரி பிரசாந்த் காம்போவில் இந்த படம் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

நேற்று நடிகர் பிரசாந்தின் 52வது பிறந்த நாள். அந்த சிறப்பு நாளில் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தனது 55வது படத்தின் அறிவிப்பை நடிகர் பிரசாந்த் வெளியிட்டார். இதில் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் நடிகர் பிரசாந்த் இயக்குனர் ஹரி நடிகர் ரவி மரியான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்த படத்தை நடிகர் தியாகராஜனே தயாரிக்கிறார்.

வழக்கமான ஹரி இயக்கும் படங்கள் என்றாலே அது போலீஸ் கதையாக இருக்கும். சாமி சாமி 2 சிங்கம் சிங்கம் 2 சிங்கம் 3 போன்ற படங்கள் போலீஸ் கதைக்களத்தில் இருந்தன. அதனால் பிரசாந்த் நடிக்கும் இந்த படமும் போலீஸ் கதைகளத்தில் உருவாகிறதா, பிரசாந்த் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் படத்தில் பிரசாந்த் கேரக்டர் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

- Advertisement -

சற்று முன்