சினிமா நடிகர், நடிகையர் சிலர் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து விடுகின்றனர். ஏனெனில், பெரும்பாலும் நடிகைகள் திருமணத்துக்கு பிறகு நடிக்க முடிவதில்லை. காரணம் கணவர், பிள்ளை, குடும்பம் என்று செட்டிலான பிறகு நடிக்க அவர்களால் முடிவதில்லை.
இன்னும் சில நடிகைகளுக்கு நடிக்க ஆர்வம் இருந்தாலும், கணவர் குடும்பம் அதை விரும்புவதில்லை. ஏனெனில், திருமணத்துக்கு பிறகு பிற ஆண்களுடன் தனது மனைவி நடிப்பதை பெரும்பாலும் கணவர் விரும்ப மாட்டார். இது நட்சத்திர தம்பதிகளிலும் பொருந்தும். உதாரணமாக, நடிகர் பார்த்திபன், தனது மனைவி சீதாவை திருமணத்துக்கு பிறகு நடிக்க அனுமதிக்கவில்லை.
அதனால்தான் சினிமா நடிகைகளில் ஒரு சிலர், திருமணம் செய்யாமல் வாழ்க்கையை கலைத்துறையில் நடித்தே கழிக்க விரும்புகின்றனர். நிகழ்கால உதாரணமாக நடிகை கோவை சரளா திருமணம் செய்துக்கொள்ளவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் நடிகை ஜெயலலிதாவும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.
இதேபோல் ஆண் நடிகர்களில் பலர் இன்னும் திருமணம் செய்யாமல், 40 வயதுகள் கடந்தும் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். இதில் பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்ஜே சூர்யா 56 வயதாகியும் இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். அதே போல் விஷால், சிலம்பரசன் போன்றவர்களும் திருமணம் ஆகாதவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். இவரது இரண்டு மகன்களில் ஒருவர் வெங்கட்பிரபு. நடிகர் மற்றும் இயக்குநர். இப்போது விஜய் நடிக்கும் கோட் படத்தை தற்போது இயக்கி வருகிறார். இவரது தம்பி பிரேம்ஜி, இப்போது 44 வயதில் உள்ள இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
தனது புத்தாண்டு வாழ்த்து பதிவில், இந்த ஆண்டு எனக்கு திருமணம் நடக்கிறது என கூறியிருந்தார். அதன்படி 44 வயதான பிரேம்ஜியை, 20 வயது குறைந்த ஒரு 24 வயது பெண், திருமணம் செய்துக்கொள்ள சம்மதித்து இருக்கிறார். விரைவில் இவர்களது திருமணம் சிறப்பாக நடக்க உள்ளது. இவ்வளவு வயது வித்யாசத்தில் திருமணம் செய்வது உடல் ரீதியாக, மன ரீதியாக பலவிதமான வேறுபாடுகளை தரும் என்றால், மனப்பொருத்தம் இருந்தால் வாழ்க்கையே சந்தோஷம்தான் என பிரேம்ஜிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





