- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் சிலம்பரசன், ரி ரிலீஸ் செய்யபட்ட சிம்புவின்...

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் சிலம்பரசன், ரி ரிலீஸ் செய்யபட்ட சிம்புவின் படம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குனராக பாடகராக இசையமைப்பாளராக தயாரிப்பாளராக மிகப்பெரிய வெற்றியை பெற்றவர் நடிகர் டி ராஜேந்தர். சினிமா அஷ்டவதானி என அழைக்கப்படும் டிஆரின் மூத்த மகன் சிலம்பரசன், சிம்பு என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர்.

குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய படங்களில் சிம்பு அறிமுகமானவர். 1984ம் ஆண்டில் வெளியான உறவை காத்த கிளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிலம்பரசன், இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

- Advertisement -

காதல் அழிவதில்லை கோவில் குத்து மன்மதன் சரவணா வல்லவன் தம் அலை விண்ணைத்தாண்டி வருவாயா வெந்து தணிந்தது காடு மாநாடு பத்துதல ஒஸ்தி செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சிம்பு, இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் என்ற படத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் வருகிற 2025ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் 1984ம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக சிம்பு அறிமுகமாகி, தற்போது 2024ம் ஆண்டில் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து கமலா தியேட்டரில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் திரைப்படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

கடந்த 2008ம் ஆண்டில், சிம்பு நடிப்பில் சிலம்பாட்டம் படம் வெளியானது. இந்த படத்தை சூரியவம்சம் பூவே உனக்காக சங்கமம் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய எஸ் சரவணன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிம்பு அப்பா, மகன் என 2 வேடங்களில் நடித்திருந்தார். அப்பாவுக்கு ஜோடியாக சினேகாவும், மகனுக்கு ஜோடியாக சனா கானும் நடித்திருந்தனர்.

மேலும் சிலம்பாட்டம் படத்தில் நடிகர்கள் பிரபு சந்தானம் கருணாஸ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது சிம்புவின் 40 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக, சிலம்பாட்டம் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்