- Advertisement -
Homeபொழுதுபோக்குராகவா லாரன்ஸ் தயாரிக்கும் படமா? காலை 11 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் போடும் கண்டிஷன்...

ராகவா லாரன்ஸ் தயாரிக்கும் படமா? காலை 11 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் போடும் கண்டிஷன் – நீங்க வேற லெவல் ப்ரோ!

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருக்கிறார். நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமான அவர், இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பெரிய வெற்றியை பெற்றது.

இப்போது காஞ்சனா 4 படப்பிடிப்பில் ராகவா லாரன்ஸ் பிஸியாக இருந்து வருகிறார். அந்த படத்தை அவரே தயாரித்து, இயக்கி நடித்து வருகிறார். ஏற்கனவே முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிப் படங்களாக இருந்தன. இப்போது காஞ்சனா 4 படம் உருவாகி வருகிறது.

- Advertisement -

ராகவா லாரன்ஸ் என்றாலே அவரது முகம் மட்டுமின்றி அவரது உதவுகிற குணம்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். அந்தளவுக்கு கோடிக்கணக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர். மாற்றம் என்ற சேவை அமைப்பை உருவாக்கி, முதல் கட்டமாக 11 விவசாயிகளுக்கு 11 புதிய டிராக்டர்களை வழங்கினார். அதில் 1 டிரா்க்டர் மட்டும் நடிகர் எஸ்ஜே சூர்யா தனது சொந்த செலவில் வாங்கித் தந்தார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது, ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் இருந்தேன். பைட் மாஸ்டர்களுடன் நானும் உட்கார்ந்திருந்தேன். அப்போது அங்கிருந்த பைட் மாஸ்டர்களுக்கு ஐஸ்கிரீம் தந்துக்கொண்டே வந்தனர். சிலருக்கு கப்களில், பாக்ஸ்களில் தந்தனர். எனக்கு ஒரு ஸ்பூனில் ஐஸ்கிரீம் தந்தனர். ஏனென்றால் நான் பைட் மாஸ்டர் அல்ல. நான் சூப்பர் சுப்பராயன் மாஸ்டருக்கு கார் துடைக்க சென்ற பையன்.

- Advertisement -

அப்போது அங்கிருந்த அனைவரும் ஐஸ்கிரீம் சாப்பிடும்போது நான் சின்ன பையன் போல அதை வேடிக்கை பார்த்தேன். எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை. ஆனால் கடைசியில் ஒரு ஸ்பூனில்தான் கிடைத்தது. அவர்கள் சாப்பிட்டதையே பார்த்ததால் அந்த ஐஸ்கிரீம் என் மனதில் அப்படியே நின்றுவிட்டது.

அதனால் என்னுடைய தயாரிப்பில் எப்போதெல்லாம் படம் ஸ்டார்ட் பண்றேனோ அப்போவெல்லாம் சரியா காலை 11 மணிக்கு, ஷூட்டிங்கில் இருக்கிற அனைவருக்கும் ஐஸ்கிரீம் தரப்படும். யூனிட்டில் இருக்கிற எல்லாருக்கும் மொத்தமாக ஐஸ்கிரீம் வந்துடும் என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார். தன்னை போல் யாரும் ஐஸ்கிரீம் கிடைக்காமல் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதால் தனது கசப்பான அனுபவத்தை வைத்து மற்றவர்களுக்கு அவர் இதை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்