- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசனை அப்படி விமர்சித்தாரா ரஜினிகாந்த்? - இது என்ன புது...

நடிகர் கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசனை அப்படி விமர்சித்தாரா ரஜினிகாந்த்? – இது என்ன புது பஞ்சாயத்தை கிளப்பி விடறாங்க?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் சரிகா தம்பதியின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். பின்னணி பாடகியாக பிரபல நடிகையாக தமிழ் தெலுங்கு சினிமாவில் வலம் வருகிறார். தமிழில் ஏழாம் அறிவு 3 பூஜை புலி வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

இதற்கிடையே கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்ட நிலையில், இனிமேல் என்ற இசை ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து நடித்திருந்தார். இதில் காதலராக ஸ்ருதிஹாசனுடன் நெருக்கமாக அவர் நடித்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

- Advertisement -

இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் கூலி. இந்த படத்தில் நடிகர் சத்யராஜின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றிரவு சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. அப்போது விழா மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார்.

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, கூலி படத்தில் முக்கியமான ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கிறது. இதில் யார் நடிக்கப் போகிறார்கள் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டேன். அதற்கு அவர் ஸ்ருதிஹாசன் சார் என்றார். உண்மையாகவா என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

- Advertisement -

நான் ஸ்ருதியை 3 படத்தின் போது பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் கிளாமரான நடிகை ஆச்சே? இந்த கதாபாத்திரத்திற்கு அவர் எப்படி என்று லோகேஷிடம் கேட்டேன். அதற்கு அவர், அவரது அப்பா படங்களில் நடிப்பதை விட உங்களது படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக ஸ்ருதி இருக்கிறார் என்று லோகேஷ் என்னிடம் கூறினார் என்று ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

தனது நெருங்கிய நண்பர் கமல்ஹாசனின் மகளை கிளாமர் நடிகை என்று ரஜினி கூறியிருப்பது இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏன் ஒரு நடிகையை ஒரே மாதிரி டைப் கிளாஸ் செய்ய வேண்டும்? அவர் கிளாமர் ரோலில் மட்டும்தான் நடிப்பாரா என்று கமல் ரசிகர்கள் ரஜினியின் இந்த பேச்சை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்