- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க என்னை தப்பா நினைச்சுக்க கூடாது, தேவாவிடம் தயக்கமாக பேசிய ரஜினிகாந்த் - அதற்கு தேனிசை...

நீங்க என்னை தப்பா நினைச்சுக்க கூடாது, தேவாவிடம் தயக்கமாக பேசிய ரஜினிகாந்த் – அதற்கு தேனிசை தென்றல் சொன்ன பளிச் பதில்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியதாவது, என்னுடன் இணைந்து அண்ணாமலை பாட்ஷா அருணாச்சலம் என 3 படங்கள் தேவா பண்ணினார். எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள். படையப்பா படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். ஒருவித தயக்கத்துடன் தேவாவிடம் சென்று இந்த படத்திற்கு ஏஆர் ரகுமானின் ஒப்பந்தம் செய்யலாம் என்று இருக்கிறேன். நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்றேன். அதை கேட்டதும் அவர் என் கைகளை பற்றிக் கொண்டு தாராளமாக செய்யுங்கள். நான் முழு மனதோடு சொல்கிறேன் சார். அந்தப் பையன் இப்போதுதான் புதிதாக வந்து கொண்டிருக்கிறார். நன்றாக செய்கிறார். அவரே செய்யட்டும். எனக்கு மிகவும் சந்தோஷம். உங்களுடன் 3 படங்களில் பணி புரிந்ததே எனக்கு பெரிய பாக்கியம் என்று பெருந்தன்மையோடு கூறினார். இப்படிப்பட்ட எந்த ஒரு கள்ளம் கபடமும் வஞ்சகமும் இல்லாத ஒரு அருமையான சொக்கத்தங்கம் தேவா என்று நடிகர் ரஜினிகாந்த் வீடியோவில் கூறியிருக்கிறார்.

சற்று முன்