- Advertisement -
Homeபொழுதுபோக்குபாக்யராஜ் - பூர்ணிமா கல்யாணம் பத்தி சொன்னப்போ நான் நம்பவே இல்லை, ஏன்னா பாக்யராஜூக்கு அது...

பாக்யராஜ் – பூர்ணிமா கல்யாணம் பத்தி சொன்னப்போ நான் நம்பவே இல்லை, ஏன்னா பாக்யராஜூக்கு அது சுத்தமா தெரியாது – ஓபனாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் நடித்த படங்களில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படம்தான் பெரிய அடையாளத்தை அவருக்கு கொடுத்தது. அந்த படத்தில் உதவி இயக்குனராக பணிசெய்த கே பாக்யராஜ் தான் ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தவர். இது எப்படி இருக்கு என்ற டயலாக் டெலிவரி மாடுலேசனும் பாக்யராஜ் உபயம்தான் என்று ரஜினியே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

அது மட்டுமின்றி அன்புள்ள ரஜினிகாந்த் மற்றும் நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் ரஜினிகாந்த் கே பாக்யராஜ் இணைந்து நடித்திருந்தனர். சமீபத்தில் சினிமாவில் 50வது ஆண்டு பயண நிறைவு விழாவை கொண்டாடிய இயக்குனர் நடிகர் கே பாக்யராஜூக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசளித்து அவரே அதை கே பாக்யராஜின் கழுத்தில் அணிவித்து பெருமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எப்போதுமே இயக்குனர் கே பாக்யராஜூக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் நெருக்கமான அன்பும் நட்பும் இருந்து வருகிறது. சினிமாவில் தனது பழைய நெருக்கமான நண்பர்களில் சிலருடன் எப்போதுமே தொடர்பில் இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அந்த வகையில் நடிகர்கள் கமல்ஹாசன் பாக்யராஜ் உள்ளிட்ட சிலர் மீது ரஜினிக்கு தனிப்பட்ட பிரியம் இருக்கிறது.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, தங்க மகன் என்ற படத்தில் நான் பூர்ணிமாவுடன் நடித்தேன். தமிழில் அப்போ தான் நடிக்க வந்திருந்தாங்க. அவங்க மும்பையில் பிறந்து வளர்ந்தவங்க. இந்தி தான் பேசுவாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டர் மத்தவங்க கிட்ட இங்கிலீஸ்ல தான் பேசுவாங்க. அநாவசியமாக யார் கூடவும் ஒ வார்த்தை கூட பேச மாட்டாங்க. ரொம்ப கண்ணியமா இருப்பாங்க.

- Advertisement -

அப்படிப்பட்டவங்க இயக்குனர் கே பாக்யராஜை கல்யாணம் பண்ணிக்க போறாங்க என்று சொன்னவுடன் என்னாலே நம்பவே முடியலே. ஏன்னா நம்ம ஆளு பாக்யராஜூக்கு இங்கிலீஸ் அவ்வளவா தெரியாது. இந்தி சுத்தமா தெரியாது. இவர் எப்படி அவங்களை கல்யாணம் பண்ணப் போறாங்கன்னு யோசனையா இருந்துச்சு.

ஆனால ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு டைரக்டரா ஒரு ரைட்டரா ஒரு நடிகராக பாக்யராஜ் வேலை செய்யறதை ஒரு வாட்டி பார்த்து விட்டார்கள் என்று சொன்னால் ஆண்களுக்கே அவர் மேல ஒரு காதல் வந்திடும். அப்படிதான் பாக்யராஜ் பூர்ணிமா கல்யாணம் நடந்தது என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசியிருக்கிறார். அந்த விழாவில் இருந்த கே பாக்யராஜ் பூர்ணிமா தம்பதி ரஜினி பேசியதை ரசித்து கேட்டு சிரித்தனர்.

- Advertisement -

சற்று முன்