- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடத்திய அரசியல் மாநாடு குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்தை தைரியமா...

விஜய் நடத்திய அரசியல் மாநாடு குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்தை தைரியமா சொலிட்டாரே… என ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்! – தலைவரே… அப்படியே வாங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடந்தாண்டில் வெளிவந்த ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரஜினிக்கு மீண்டும் ஒரு பாட்ஷா என்று சொல்லப்பட்டது. அந்தளவுக்கு ரஜினிக்கு இந்த படம் கம்பேக் படமாக இருந்ததாக பேசப்பட்டது.

இதுவரை தான் நடித்த எந்த படத்திலும் அதன் 2ம் பாகத்தில் நடிக்காத நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் படம் 2ம் பாகத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினி நடித்த படம், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். படம் பயங்கர பிளாப் ஆகி படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

லால் சலாம் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். கடந்த 10ம் தேதி வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. படம் அமோக வசூலை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி இப்போது நடித்து வருகிறார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரஜினிகாந்த், மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். மீண்டும் கூலி படப்பிடிப்பில் ரஜினி சில தினங்களில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை, கடந்த ஞாயிறு அன்று விக்கிரவாண்டியில் நடத்தினார். இந்த மாநாட்டில் நேரடியாக ஊழல் செய்து, குடும்ப அரசியல் நடத்திவரும் திமுக தான் எனது அரசியல் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்தார். இது மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் கூறிய கருத்துகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் திரை பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தீபாவளி தினத்தன்று தனது வீட்டின் முன் திரண்டிருந்த தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்களிடம், பேசிய நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துகள். எல்லோரும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக சந்தோஷமாக இருக்க வேண்டும். நடிகர் விஜயின் மாநாடு பற்றிய கேள்விக்கு, மாநாடு உண்மையில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். விஜய்க்கு ஆதரவாக ரஜினி பேசியது சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்