- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படத்தில் வரும் அந்த காட்சி, சீமான் சொல்ல சொல்ல விழுந்து விழுந்து சிரித்த ரஜினி...

வேட்டையன் படத்தில் வரும் அந்த காட்சி, சீமான் சொல்ல சொல்ல விழுந்து விழுந்து சிரித்த ரஜினி – அட இதெல்லாம் எப்போ நடந்துச்சு? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக, நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் சீமான். இவர் தம்பி, பசும்பொன், வாழ்த்துகள், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர். அதேபோல் மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம், மிக மிக அவசரம், எவனோ ஒருவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

சினிமா நடிகராகவும் இயக்குனராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீமான், நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் முக்கிய அடையாளம் மிக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் இயக்கமாக நாம் தமிழர் கட்சி இருந்து வருகிறது என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

ஆனால் நடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், வாக்காளர்களுக்கு எந்தவிதமான பரிசுப் பொருளோ, பணமோ தராமல் வாக்காளர்களின் தானாக முன்வந்து ஓட்டளித்த வகையில், அதிக ஓட்டுக்களை பெற்று ஒரு தனித்துவமான அரசியல் கட்சியாகவும் நாம் தமிழர் கட்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் என்ற திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த படக்குழு சார்ந்த முக்கிய நிர்வாகியை அழைத்து படம் குறித்து தனது வாழ்த்துகளை, கருத்துகளை கூறி இருக்கிறார். அப்போது அவருடன் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென முக்கிய நபருக்கு கான்பரன்ஸ் கால் இணைப்பதாக கான்பரன்ஸ் கால் செய்துள்ளார்.

- Advertisement -

அப்போது எதிர்முனையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். ரஜினிகாந்த் என்று தெரியாமல், ஆரம்பத்தில் தடுமாறிய சீமான் பிறகு சுதாரித்துக் கொண்டு வேட்டையன் படம் குறித்து தனது கருத்துக்களை ரஜினியிடமும் கூறி பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற சமூக கருத்துள்ள படங்களில் இனி தொடர்ந்து நடியுங்கள் என்றும் ரஜினியிடம் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.

அப்போது வேட்டையன் படத்தில், ஒரு காட்சியில் போலீஸ் அதிகாரி ரஜினி வீட்டுக்குள் ரவுடி கும்பல் ஒன்று புகுந்துவிடும். அவரது மனைவி மஞ்சவாரியார் அவர்களை துப்பா்ககியால் சுடுவார். அதில் சிக்கிக்கொள்ளும் ஒரு ரவுடி, ரஜினிக்கு போன் செய்து, உங்கள் மனைவியை என்னை சுட வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கெஞ்சுவார். அப்போது ரஜினி, எந்த பொண்டாட்டி புருஷன் பேச்சைக் கேட்பா, வைடா போனை என டயலாக் பேசி இருப்பார். அந்த டயலாக் குறித்து சீமான் சொல்ல, ரஜினி விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். இருவரும் நீண்ட நேரம் பேசிய நிலையில், ரஜினி மிகவும் ஜோவியலாக சீமானிடம் பல விஷயங்களை மனம் விட்டு பேசியிருக்கிறார். இது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்