- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி என் மீது அவதூறு பரப்பினால்…. சட்ட ரீதியாக விளைவுகளை சந்திக்க நேரிடும் - லீகல்...

இனி என் மீது அவதூறு பரப்பினால்…. சட்ட ரீதியாக விளைவுகளை சந்திக்க நேரிடும் – லீகல் நோட்டீஸ் வெளியிட்டு எச்சரித்த பாடகி கெனிஷா!

- Advertisement -

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்திருக்கிறார். அவர்களது விவாகரத்து வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இப்போது தனது கணவரிடம் இருந்து மாதந்தோறும் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் செய்திருக்கிறார். வருகிற ஜூன் 12ம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்க நடிகர் ரவி மோகனுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே ரவி மோகன், ஆர்த்தி குடும்ப விவகாரத்தில் பாடகி கெனிஷா பெயர் பலத்த அடிபடுகிறது. ரவி மோகனின் நெருங்கிய தோழியான பாடகி கெனிஷா நட்பில் இருப்பதால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கெனிஷா குறித்த புகார்களும் குற்றச்சாட்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக பாடகி கெனிஷா, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக லீகல் நோட்டீஸ் ஒன்றையும் இப்போது வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பாடகி கெனிஷாவின் சட்ட ஆலோசகர்கள் குழு ஒரு லீகல் நோட்டீசை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, திருமண பிரிவினையை விரும்பும் ஒரு பிரபலத்துடன் தவறான தொடர்பு இருப்பதாக கூறி கெனிஷா பிரான்சிஸ் இணையத்தில் குறிவைக்கப்படுகிறார்.

மேலும் அவர் ஆன்லைன் அவதூறு, கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள், பாலியல் துன்புறுத்தல் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் படங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இதில் டேக்கிங், கருத்து தெரிவித்தல், மறுபதிவு செய்தல் மற்றும் தவறான அல்லது தூண்டுதல் உள்ளிட்ட பகிர்தல் ஆகியவையும் அடங்கும். இதற்கு பாரதியா நயாயா சன்கீதா 2023 சட்டம் 75, 351, 356 பிரிவுகளின் கீழும் விதிமீறல்கள் ஐடி 2000 சட்டம் 66 இ 67 மற்றும் 67ஏ பிரிவுகளின் கீழும் இதில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அவருக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் வந்திருக்கும் அனைத்து ஆன்லைன் குறுஞ்செய்திகளும் ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.இதில் கெனிஷாவுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் பதிவுகளை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும்.

இதற்கு இணங்க தவறுபவர்கள் சேதங்கள், தடை உத்தரவுகள் மற்றும் தள அளவினா நடவடிக்கைகள் உள்ளிட்ட சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு ஆளாக்க படுவார்கள். அனைத்து தளங்களில் இருந்தும் அவர்கள் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று அந்த சட்டபூர்வமான எச்சரிக்கை நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்