தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர் நடிகைளுக்கு பொழுதுபோக்கு என்றால் சிலர் நாள் முழுவதும் படுத்து தூங்கி ஓய்வு எடுப்பார்கள். சிலர் இசை கேட்பார்கள். சிலர் குடும்பத்துடன் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவார்கள். சிலர் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அல்லது பிரசித்த பெற்ற கோவில்களுக்கு செல்வார்கள். இது நடிகர் நடிகைகளுக்கு மட்டுமல்ல, பொதுவான மனிதர்களுக்கும் பொருந்தும்.
பெரும்பாலான வெற்றிப் படங்கள் கூட நாவல்கள் கதைகள் என புத்தகங்களில் இருந்து உருவானதுதான். குறிப்பாக தமிழில் வெற்றிப் படங்களாக இருந்த தில்லானா மோகனாம்பாள், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படங்கள் கூட நாவல்களை திரைப்படமாக்கிய படைப்புகள்தான். வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படமும் ஒரு நாவலின் கதைதான்.
அதனால் வாசிப்பு ஆர்வம் கொண்ட ஒரு குறிப்பிட்ட மக்கள் ஓய்வு நேரத்தை புத்தகங்களுடன் செலவிடுவார்கள். ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை புத்தகம் வாசிக்க என்றே ஒதுக்கி விடுவார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் இருவருமே தீவிரமான புத்தக வாசிப்பாளர்கள். கமல் எப்போதுமே வாசித்துக்கெொண்டே இருப்பவர். சமீபத்தில் வேள்பாரி நூல் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தனது வாசிப்பு பழக்கம் குறித்து பேசியிருக்கிறார்.
அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கதை இருக்கு. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். வாட் ஈஸ் ஹிஸ்டரி. ஹிஸ் ஸ்டோரி ஈஸ் ஹிஸ்டரி. புத்தகங்கள் படிப்பது என்பது ஒரு அருமையான ஹாஃபி. புத்தகங்கள் படிக்கிற அந்த பழக்கத்தை ஏற்படுத்திக்கணும்.
அந்த புத்தகங்களை பக்கத்துல எடுத்து வச்சிக்கிட்டு அதை அப்படியே புரட்டி பார்த்தால் அது பல விஷங்களை உங்களுக்கு சொல்லும். பல பேரை அறிமுகப்படுத்தும். உங்களை சிந்திக்க வைக்கும் என்று சொல்வார்கள். அப்படி அந்த புத்தகம் வாசிக்கிற பழக்கம் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் படிக்கும்போது எனக்கு வந்தது.
நான் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் படித்த போது அங்கு சண்டே சண்டே என ஒவ்வொரு வாரமும் புத்தகம் ஒரு மணி நேரம் படிச்சுதான் ஆகணும். படிச்சது என்ன என்பது பற்றியும் அங்கு சொல்லணும். அப்போதான் எனக்கு வாசிப்பு பழக்கம் வந்தது. அதுக்கு அப்புறம் அம்புலி மாமாவில் இருந்து துப்பறியும் கதைகளில் இருந்து பெரிய பெரிய நாவலிஸ்ட் எழுதிய கதைகளை படித்தேன்.அதில் மிகப்பெரிய நாவலிஸ்ட்களில் 3, 4 பேர் எல்லாம் தமிழ் எழுத்தாளர்கள் என்று அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த பேசியிருக்கிறார்.





