தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ரோஜா. 1992ம் ஆண்டில் செம்பருத்தி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். 8 ஆண்டுகளில் 100 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தாா். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான படங்களில் ரோஜா நடித்திருக்கிறார்.
ஆந்திரா அரசியல் களத்தில் குதித்து எம்எல்ஏ அமைச்சர் பதவிகளை வகித்த நடிகை ரோஜா, ஆட்சி மாற்றம் காரணமாக இப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். சமீபத்தில் வெளியான அன்பே டயானா படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடித்தது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நான் நடிக்க வாய்ப்பு வந்த போது இயக்குனர் விக்ரமனுக்கு நிறைய பேர் அட்வைஸ் செய்திருக்கின்றனர். ரோஜாவை ஏன் நடிக்க வைக்கறீங்க? அவங்க கிளாமர் ஹீரோயின். அது புஃல் அண்ட் புஃல் பேமிலி சப்ஜெக்ட்.
நீங்க எடுக்கிற படத்துல அவங்களை நடிக்க வெச்சா படம் எப்படி ஓடும்? ஏதேதோ இப்படி சொல்லியிருக்காங்க. எவ்வளவோ பேர் அப்படி அவர்கிட்ட சொல்லியிருக்காங்க. என்கூட ஒர்க் பண்ணாதவங்க கூட சில புரடியூசர்ஸ் சில டைரக்டர்கள் கூட அவர்கிட்ட அப்படி சொல்லியிருக்காங்க.
ஆனால் விக்ரமன் அவங்க கிட்ட எல்லாம், அதெல்லாம் இல்லே. இந்த கேரக்டருக்கு ரோஜா தான் கரெக்ட். ரோஜா தான் வேண்டும் என்று அந்த படத்தில் என்னை நடிக்க வெச்சதால் தான் நான் தமிழ்நாடு பெஸ்ட் ஆக்டர்ஸ் அவார்டு வாங்கியிருக்கேன் அந்த படத்துக்காக.
ஒருவேளை டைரக்டர் சார் வந்து டபுள் மைண்டுல எல்லாருமே இப்படி சொல்றாங்களே? எதுக்கு வேற யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்தால் என்னோட நிலமை என்னவாகியிருக்கும் என்று அந்த நேர்காணலில் நடிகை ரோஜா வெளிப்படையாக பேசியிருக்கிறார். கடந்த 1998ல் வெளியான இந்த படத்தில் நடிகர் கார்த்திக் ஹீரோவாகவும் அஜீத்குமார் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தனர்.





