- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி மட்டும் செஞ்சா நம்மளை விட கேவலமானவங்க யாரும் இல்லே - பிரபல இயக்குனரிடம் வெளிப்படையாக...

அப்படி மட்டும் செஞ்சா நம்மளை விட கேவலமானவங்க யாரும் இல்லே – பிரபல இயக்குனரிடம் வெளிப்படையாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

படையப்பா படம் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, படையப்பா படம் மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால் என்னுடைய அப்பா கேரக்டரில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்தால்தான் அது வேற லெவலில் இருக்கும் என்றும் கருதினேன். அதனால் அந்த கேரக்டரில் சிவாஜி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் சொன்னேன்.

ஆனால் அதற்கு கேஎஸ் ரவிக்குமார் மறுப்பு தெரிவித்தார். அந்த கேரக்டரில் சிவாஜி சார் நடிக்க வேண்டாம் என்று கூறினார். ஏனென்றால் படத்தில் அந்த கேரக்டர் சில காட்சிகள் மட்டுமே வரப்போகிறது. சிவாஜி கணேசன் போன்ற ஒரு பெரிய நடிகரை அப்படி சில காட்சிகளில் மட்டுமே காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிருப்தியடைந்து விடுவார்கள் என்றும் ஒரு காரணத்தை சொன்னார்.

- Advertisement -

ஆனாலும் நடிகர் சிவாஜி கணேசன்தான் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று நான் பிடிவாதமாக சொல்லிவிட்டேன். பிறகு கேஎஸ் ரவிக்குமார் சிவாஜி கணேசன் வீட்டுக்குச் சென்று அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். அவரும் கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் என்று சொல்லிவிட்டார். அந்த தகவலை கேஎஸ் ரவிக்குமார் என்னிடம் வந்து சொன்ன போது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் ரவிக்குமார் முகத்தில் சந்தோஷம் இல்லை. மிகவும் வருத்தமாக இருப்பது போல தோன்றியது. ஏன் என்று கேட்ட போது, அவருக்கு 6 அல்லது 7 நாட்கள் தான் கால்ஷீட் தேவைப்படும். ஆனால் அவர் நடிக்க மிகப்பெரிய சம்பளத்தை கேட்கின்றனர். அதனால் அவர் வேண்டாம் என்று யோசிக்கிறேன் என்று தயங்கியபடியே சொன்னார்.

- Advertisement -

நாம் முதலில் அவரிடம் பேசிவிட்டோம். படத்தின் கதை அவரோட கேரக்டர் எல்லாம் சொல்லி விட்டோம். இப்போது சம்பளம் அதிகம் என்பதற்காக அவரை படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னால், நம்மளை விட கேவலமானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் என்ன? அவங்க கேட்ட சம்பளத்தையே தந்துவிடுவோம் என்று சொன்னேன். ஏனென்றால் அந்த படத்தின் தயாரிப்பாளர் நான்தான்.

அடுத்த நாள் பிரபுவிடம் பேசிவிட்டு சிவாஜி சார் வீட்டில் இருந்த போது நான் நேரில் வீட்டுக்குச் சென்றேன். படையப்பா படத்தில் நடிக்க அவருக்கான சம்பளத்தை மொத்தமாக அவரது காலடியில் வைத்து ஆசிர்வாதம் வாங்கி, இந்த படத்தில் நீங்க நடிக்கிறது ரொம்ப சந்தோஷம் என்று கூறிவிட்டு வந்தேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்