செய்யும் தொழிலே தெய்வம் என்று ஒரு பழமொழி உள்ளது. இது காலம் காலமாக சொல்லப்படும் ஒரு பழைய தத்துவமாக பலருக்கு பூமராக தெரிந்தாலும் அது என்றைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு அற்புதமான பொன்மொழியாக தான் இருக்கிறது. ஏனென்றால் தொழிலில் ஏற்படும் முன்னேற்றமும் செல்வாக்கும்தான் ஒரு மனிதனை வெற்றியாளனாக அடையாளப்படுத்துகிறது.
சினிமாவில் ஜெயித்தவர்களில் பெரும்பாலானோர் இந்த பொன்மொழியை எப்போதுமே மறப்பது இல்லை. அதனால்தான் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்த் கூட இப்போதும் ஷூட்டிங் என்றால் கேமரா முன்பு அறிமுக நாயகன் போல தன்னை நினைத்துக்கொண்டு நிற்கிறார். தொழிலுக்கு அவ்வளவு மரியாதையும் முக்கியத்துவமும் தருகிறார். ஏனென்றால் சினிமா தான் அவரை இந்த அளவுக்கு உச்சத்துக்கு கொண்டு சென்றது.
ஆனால் நடிகர் அஜீத்குமார் போன்றவர்களின் செயல்பாடு இப்படி ஒரு பழமொழியோ அல்லது அந்த சினிமா நடிப்பு சார்ந்த தொழில் மீது ஒரு அக்கறையோ கவனமோ அவருக்கு இருக்கிறதா என்பதை தான் பெரிய கேள்வியாக எழுகிறது. ஏனென்றால் பேஷன் என்கிற பெயரில் இந்த 2025ம் ஆண்டு முழுவதையும் அவர் கார் ரேஸ்க்காகவே ஒதுக்கி விட்டார்.
அவருக்காக சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ரசிகர்களும் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில், என் விருப்பம் தான் எனக்கு முக்கியம் என வெளிநாடுகளில் நடக்கும் கார் ரேஸ்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அடுத்த படத்தில் நடிக்காமல் கார் ரேஸில் அஜீத் முழு கவனம் செலுத்தி வருவது அவரது ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.
மேலும் கார் ரேஸில் கலந்துக்கொள்ள அதிக முக்கியத்துவம் தரும் நடிகர் அஜீத்குமார், ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக மட்டுமே ரூ. 185 கோடி வேண்டும் என்கிறார். இவருக்கு சினிமா மீதும் செய்யும் தொழில் மீதும் தனது ரசிகர்கள் மீதும் எந்த கவனமோ அக்கறையோ இல்லை. முழுக்க முழுக்க கார் ரேஸ்தான் இவருக்கு முக்கியமாக உள்ள நிலையில் சம்பளம் மட்டும் ரூ. 185 கோடி கேட்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி கூறியதாவது, அஜீத்குமாருக்கு நடிகர் விஜய் அளவுக்கு சினிமாவில் பெரிய மார்க்கெட் இல்லை. அவர் நடித்த படங்கள் பெரிய வசூலும் இல்லை. அவர் ஒரு படத்தில் நடிக்க 185 கோடி ரூபாய் சம்பளம் கேட்பது நியாயமே இல்லை என்று கூறி அஜீத்குமாரை கடுமையாக பிஸ்மி விமர்சித்துள்ளார்.





