- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம், விளாசித் தள்ளிய காமெடி நடிகர் யோகிபாபு - கண்டிக்காமல் வேடிக்கை...

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம், விளாசித் தள்ளிய காமெடி நடிகர் யோகிபாபு – கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

- Advertisement -

பொதுவாக திரைப்பட படப்பிடிப்புகளில் நடிக்கும் போது கேமரா முன்பு பலருக்கு நடுவில் வெளிச்சத்தில் நின்று நடிப்பது சாதாரண விஷயம் அல்ல. பல சீனியர் நடிகர்கள் கூட வசனம் பேசும்போது வார்த்தைகளை மறந்து விடுவர். லேசாக தடுமாற்றம் அடைவர். இது சாதாரணமாக நடக்கும் விஷயம்.

அதே போல் புதுமுக நடிகர்கள் துணை நடிகர்கள் நடிகைகள் நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் இதுபோன்று சொதப்புவது சகஜமாக நடக்கும். அப்போது அருகில் உள்ள மற்ற பெரிய நடிகர்கள் சீனியர் நடிகர்கள் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி தயக்கம் பயம் இல்லாமல் சகஜமாக நடிக்க அட்வைஸ் செய்வார்கள்.

- Advertisement -

ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் மிக மோசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தை தொடர்ந்து இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் காமெடி ரோலில் யோகிபாபு நடித்ததால் இந்த படத்திலும் ரஜினி யோகிபாபு காம்பினேஷனில் காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

அப்படி ஒரு நாள் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினிகாந்த் யோகிபாபு நடித்த ஒரு காமெடி காட்சி படமாக்கப்பட்ட போது, அந்த காட்சியில் நடித்த ஒரு துணை நடிகர் சரியாக நடிக்காமல் சற்று சொதப்பி இருக்கிறார். இதைப் பார்த்த நடிகர் யோகிபாபு அதே இடத்தில் அந்த துணை நடிகரை கண்டபடி திட்டி இருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே ஒருவித தயக்கத்தால் அச்சத்தால் அந்த காட்சியில் நடிக்க முடியாமல் திணறிய அந்த துணை நடிகர், யோகிபாபு கண்டபடி திட்டியதால் மேலும் வெலவெலத்துப் போய் டென்ஷனாகி விட்டார். ஆனால் இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த நடிகர் ரஜினிகாந்தும் வேடிக்கை பார்த்திருக்கிறார்.

இதை ரஜினிகாந்த் கண்டிக்காமல் யோகிபாபுவின் இந்த செயலை வேடிக்கை பார்த்தது அங்கிருந்த மற்றவர்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. ரஜினி படம் மட்டுமின்றி யோகிபாபு நடிக்கும் பெரும்பாலான படங்களில் இப்படி சக நடிகர்களை துணை நடிகர்களை திட்டுவது இழிவாக பேசுவதை யோகிபாபு ஒரு வழக்கமாகவே வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இவரை கண்டிக்க யாருமே இல்லையா என்றுதான் ரசிகர்களும் அதிருப்தியடைகின்றனர்.

- Advertisement -

சற்று முன்