- Advertisement -
Homeபொழுதுபோக்குகார் டயர் பஞ்சர் ஆனதால் பாரதிராஜா பட கதாநாயகி ஆன லேடி சூப்பர் ஸ்டார் -...

கார் டயர் பஞ்சர் ஆனதால் பாரதிராஜா பட கதாநாயகி ஆன லேடி சூப்பர் ஸ்டார் – சீக்ரெட்டை போட்டுடைத்த மன்னன் பட நாயகி!

- Advertisement -

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொல்வதை போல கல்லையும் மண்ணையும் கூட நடிக்க வைக்கும் கலை வித்தகர் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்று சொல்வார்கள். பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கும் போது அவர் சொல்லி கொடுப்பதில் 10 சதவீதம் நடித்தாலே சிறந்த நடிகர் என்று பாராட்டு கிடைத்து விடும் என்று பெரிய பெரிய நடிகர்களே வெளிப்படையாக கூறியிருக்கின்றனர்.

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கல்லுக்குள் ஈரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயசாந்தி. பிறகு இளம்ஜோடிகள் என்ற படத்தில் நடித்தார். பிறகு தமிழில் பல படங்களில் நடித்த அவர் தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தார்.

- Advertisement -

அதில் வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த விஜயசாந்தி அதிரடி சண்டை காட்சிகளில் தூள் கிளப்பினார். அப்போதுதான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களிடம் பட்டம் கிடைத்தது. பிறகு மன்னன் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக திமிர் பிடித்த மனைவி கேரக்டரில் விஜயசாந்தி நடித்திருந்தார்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை விஜயசாந்தி கூறியதாவது, விதி பாருங்க எப்படி விளையாடி இருக்கு? இயக்குனர் பாரதிராஜா சார் எங்கள் ஊர் பக்கம் வழியாக போகும் போது அவரோட கார் திடீரென பஞ்சர் ஆயிடுச்சு. அப்போது கார் டிரைவர், வண்டி ரெடியாக 300 நிமிஷம் ஆகும்ண்ணே. நீங்க பக்கத்துல ஒரு ஸ்டுடியோ இருக்கு. அங்கே போய் வெயிட் பண்ணுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

அப்படி அந்த ஸ்டுடியோவில் உட்கார்ந்த பாரதிராஜா, அங்கே இருந்த போட்டோஸ் எல்லாம் காட்டுங்க பார்க்கலாம் என்று கேட்டிருக்கிறார். அப்படி பார்க்கும்போது என்னோட போட்டோ ஒண்ணை பார்த்துட்டு, யார் இந்த பொண்ணு? என்று விசாரித்து இவங்களை நான் உடனே பாக்கணும் என்று சொல்லி இருக்கிறார்.

அப்புறம் எங்க அப்பாவை வந்து பார்த்து அவர்கிட்ட பேசினார். அப்புறம் என்னை போட்டோ ஷூட் பண்ணி நல்லா இருக்காங்கன்னு சொல்லி உடனே ஹீரோயினா என்னை ஓகே பண்ணிட்டார் என்று நடிகை விஜயசாந்தி கூறியிருக்கிறார். பாரதிராஜா வந்த கார் டயர் மட்டும் பஞ்சர் ஆகவில்லை என்றால் நான் சினிமாவில் நடிக்க வந்திருப்பேனா என்று தெரியாது என்றும் விஜயசாந்தி அதில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்