- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாரா - தனுஷ் மோதல் விவகாரம்; மக்கள் நாயகன் ராமராஜன் என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க...

நயன்தாரா – தனுஷ் மோதல் விவகாரம்; மக்கள் நாயகன் ராமராஜன் என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க – சீனியர் எப்பவுமே சீனியர்தாம்பா…!

- Advertisement -

மக்கள் நாயகன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ராமராஜன். கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர். ரஜினி, கமலுக்கு இணையாக வசூல் மன்னனாக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ராமராஜன், கவுண்டமணி செந்தில் காமெடி, இளையராஜா இசை என்றாலே அந்த படம் வெற்றிப் படம்தான் என்பது எழுதப்படாத விதியாக அப்போது இருந்தது.

குறிப்பாக எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே நம்ம ஊரு நல்ல ஊரு தங்கமான ராசா ராஜா ராஜாதான் எங்க ஊரு காவல்காரன் மனசுக்கேத்த மகாராசா கரகாட்டக்காரன் ஊருவிட்டு ஊருவந்து என ராமராஜன் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன.

- Advertisement -

ராமராஜன் படங்களின் வெற்றிக்கு பெரிய பக்கபலமாக இருந்தது இளையராஜா இசைதான். எஸ்பிபி எஸ் ஜானகி மனோ சித்ரா என பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்களாக ராமராஜன் படங்களில் அமைந்தன. பாடல்களும், காமெடியும், கிராமத்து கதைகளும் அவரை வெற்றி நாயகனாக தமிழ் சினிமாவில் புகழடைய செய்தது.

இப்போது சாமானியன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் ராமராஜன் நல்ல கேரக்டர் உள்ள கதைகளாக இருந்தால் மீண்டும் நடிப்பதற்கு தயாராகவே இருக்கிறார். அதே போல் அவரது மனைவி நளினி, டிவி சீரியல்களில், திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பல ஆண்டுகளாக நளினி, ராமராஜன் பிரிந்து வாழ்கின்றனர்.

- Advertisement -

கடந்த சில தினங்களாக தனுஷ், நயன்தாரா விவகாரம் கோலிவுட்டில் பெரிய சர்ச்சையாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஆவணப்படம் விவகாரத்தில் தனுஷ் என்ஓசி தரவில்லை என நயன்தாரா வெளியிட்ட அறிக்கையும், தனுஷ் கேட்ட ரூ. 10 கோடி நஷ்டஈடும் இணையத்தில் பேசுபொருளாக மாறி வைரலாகி வருகிறது. இதுகுறித்து நடிகர் ராமராஜினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து பதிலளித்த நடிகர் ராமராஜன், இதெல்லாம் எதுக்கு சார், நாட்டுல எதுஎதுவோ நடந்துட்டு இருக்கும். நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை பார்த்துக்கிட்டு போவோம். ரோட்டுல போகும்போது 2 பேர் சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்க. கண்டுக்காத மாதிரி போறோம். அதே மாதிரி இப்பவும் போயிடுவோம். அதைப் பற்றி திருப்பி திருப்பி கேட்காதீங்க, என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்