- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ராமராஜன் வீட்டில் நடந்த துயரச் சம்பவம்; மனம் நொறுங்கிப் போன கிராமத்து நாயகன் -...

நடிகர் ராமராஜன் வீட்டில் நடந்த துயரச் சம்பவம்; மனம் நொறுங்கிப் போன கிராமத்து நாயகன் – சாமானியன் ரிலீஸ் நேரத்தில் திடீரென நேர்ந்த சோகம்!

- Advertisement -

நடிகர் ராமராஜன் தமிழ் சினிமாவில் 1980,90 களில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வந்தவர். ரஜினி கமல் படங்களை போன்று, ராமராஜன் படங்களும் சினிமா தியேட்டர்களில் கொண்டாடப்பட்ட காலகட்டம் அது. குறிப்பாக கரகாட்டக்காரன் படம், பல தியேட்டர்களில் 125 நாட்கள், 150 நாட்கள், 175 நாட்கள் 200 நாட்கள் என அதிக நாட்கள் ஓடியது. சில தியேட்டர்களில் 365 நாட்கள் ஓடியது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் ஒரு விழாவில் பேசும்போது, நானும் ரஜினியும் பலவிதமான கேரக்டர்களை ஏற்று போராடி நடித்து வருகிறோம். அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்புவாக நான் கஷ்டப்பட்டு நடித்து, அந்த படம் வெற்றி பெற்றது. ஆனால் நடிகர் ராமராஜன் தலையில் ஒரு கரகத்தை வைத்து ஆடி வெகு எளிதாக அந்த வெற்றியை பெற்றுவிட்டார் என்று வேடிக்கையாக குறிப்பிட்டு பேசியிருந்தார். அந்த அளவுக்கு நடிகர் ராமராஜன் மிகப்பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு மிக்க நடிகராக இருந்தவர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் அப்போது முன்னணி நாயகியாக இருந்த நடிகை நளினியை காதலித்து, ராமராஜன் திருமணம் செய்து கொண்டார். 13 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக நீடித்த நிலையில், பிறகு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இப்போதும் நடிகை நளினி திரைப்படங்களில் அம்மா, அக்கா, அத்தை, மாமியார் கேரக்டர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக டிவி சீரியல்களில் அதிகமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருந்த ராமராஜன், ஒரு கட்டத்தில் அதிமுக விசுவாசியாக மாறினார். ஏனெனில் எம்ஜிஆரின் மிக தீவிரமான ரசிகர். தனது படங்களில் இதுவரை அவர் மதுபானம் குடிப்பது போலவோ, சிகரட் பிடிப்பது போலவோ நடித்தது இல்லை. ஜெயலலிதாவின் விசுவாசியான ராமராஜனை, அவர் ராஜ்ய சபா எம்பி ஆக்கினார். தேர்தல் பிரசாரங்களிலும் ராமராஜன் அதிகமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார்.

- Advertisement -

அப்படி ஒருமுறை அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்து விட்டு, காரில் மதுரைக்கு நள்ளிரவில் திரும்பி வரும்போது, மதுரை அருகே ஏற்பட்ட மோசமான விபத்தில், பலத்த காயமடைந்த ராமராஜன் பல மாதங்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். அதன் பிறகு அவரது உடல் தோற்றமும், முகமும் மாறிய நிலையில், சினிமாவில் அவரால் நடிக்க முடியவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சாமானியன் என்ற படத்தில் ராமராஜன் நடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

நடிகர் ராமராஜன் மதுரை, மேலூரைச் சேர்ந்தவர். அங்குதான் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், குடும்ப உறவுகள் இருக்கின்றனர். அவரது உடன்பிறந்த அக்கா புஷ்பவதியும் அங்குதான் இருந்தார். புஷ்பவதி சில ஆண்டுகளாக உடல் நலமில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 75 ஆன நிலையில், நேற்று காலமானார். சகோதரி திடீர் மறைவால் மனம் உடைந்து போன ராமராஜன், சொந்த ஊரான மேலூருக்கு சென்றிருக்கிறார். அக்காவின் மறைவு மிகப்பெரிய அளவில், அவரை பாதித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்