- Advertisement -
Homeபொழுதுபோக்குசமூக பிரச்னை, காதலர்கள் ஓட்டம், அடிதடி, கலாட்டா போன்ற எல்லா பிரச்னைகளுக்கும் இது ஒன்றுதான் தீர்வு...

சமூக பிரச்னை, காதலர்கள் ஓட்டம், அடிதடி, கலாட்டா போன்ற எல்லா பிரச்னைகளுக்கும் இது ஒன்றுதான் தீர்வு – நடிகர் ரஞ்சித் சொல்லும் விஷயம் வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

நடிகர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக ரசிகர்களால் வரவேற்று ரசிக்கப்பட்டவர். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். டிவி சீரியல் ஒன்றிலும் சமீப காலமாக நடித்து வருகிறார். நாயகன், வில்லன், காமெடியன் என்ற எல்லாவித கேரக்டர்களிலும் அசத்தும் நடிகராக ரஞ்சித் இருக்கிறார்.

சிந்துநதிப்பூ படம் மூலம் அறிமுகமான ரஞ்சித் பாண்டவர் பூமி, என்னம்மா கண்ணு, சபாஷ், நேசம் புதுசு, பொன்விலங்கு, பசுபதி மே/பா ராசக்காபாளையம், பீஷ்மர், மறுமலர்ச்சி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். சில படங்களை அவரே தயாரித்து, நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது, கவுண்டம்பாளையம் என்ற புதிய படத்தை அவரே டைரக்ட் செய்து, நடித்திருக்கிறார். நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம், வரும் ஜூலை 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. கோவை பகுதியில் எடுக்கப்பட்ட இந்த படம் பெற்றோர்கள், இளம்பெண்கள் எதிர்காலம் மற்றும் நாடக காதலை மையப்படுத்திய விழிப்புணர்வை கதைக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் படம் குறித்த பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஞ்சித் கூறியதாவது, இந்த படத்தில் நாடக காதலை சொல்லியிருக்கிறேன். பெத்து பல ஆண்டுகள் பாதுகாத்து தங்களது பெண் குழந்தைகளை பெற்றோர்கள் பொத்தி பொத்தி வளர்க்கின்றனர். ஆனால் நாடக காதலில் அந்த பெண்களை ஏமாற்றி ஆண்கள் கடத்திக்கொண்டு போய் விடுகின்றனர்.

- Advertisement -

இப்படிப்பட்ட நாடக காதலை, ஏமாற்றுபவர்களை எதிர்க்கும் படமாக இந்த கவுண்டம்பாளையம் படம் இருக்கும். இதில் பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் வலியை, வேதனையை, கண்ணீரை சொல்லி இருக்கிறேன். இதுபோன்ற விஷயங்களை சமூக நீதி என்றும், அதற்கு எதிராக குரல் கொடுக்கும் என்னை சாதி வெறியன் என்று யாரேனும் சொன்னால், ஆமாம், நான் சாதி வெறியன்தான். என்னை சாதி வெறியன் என்றே சொல்லிக் கொள்ளட்டும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.

பெற்றோருக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம், அதனால் ஏற்படும் சமூக நிதி, சாதிய பிரச்னைகள், அடிதடி, கலாட்டா, ஆணவக்கொலை போன்ற பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு, திருமண பதிவு மையங்களில் பெற்றோரின் கையெழுத்து இல்லாமல், பெண்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. பெற்றோர் கையெழுத்து இருந்தால்தான் அங்கு முறைப்படி திருமணம் செய்ய முடியும் என்ற சட்டத்தை கொண்டு வந்துவிட்டால், இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைத்துவிடும். அப்படி ஒரு சட்டத்தை ரிஜிஸ்டர் ஆபீஸ்களில் கொண்டு வர வேண்டும், என்று நடிகர் ரஞ்சித் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்