- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் படங்களில் நடிக்க தடை - துரந்தர் பட ஹீரோவுக்கே...

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் படங்களில் நடிக்க தடை – துரந்தர் பட ஹீரோவுக்கே இப்படி ஒரு சிக்கலா? குழப்பத்தில் பாலிவுட் ரசிகர்கள்!

- Advertisement -

இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகராக உள்ள ரன்வீர் சிங் திரைப்படங்களின் நடிக்க பாலிவுட் திரைப்பட அமைப்பு தடை விதித்துள்ளது. இது பாலிவுட் ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான துரந்தர் 2 படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாகவும் இருந்தது.

பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக உள்ள ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் டான் 3 என்ற படத்தில் நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பல கோடி ரூபாய் செலவில் படத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், டான் 3 படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் திடீரென நடிகர் ரன்வீர் சிங் டான் 3 படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது படக்குழுவினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி இந்திய திரைப்பட வரலாற்றில் பெரிய வசூல் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் ரன்வீர் சிங்கின் சம்பளமும் பன்மடங்கு உயர்ந்தது.

இந்நிலையில் டான் 3 படத்தில் துரந்தர் படத்தைப் போலவே அதிகமான வன்முறை காட்சிகள் வைக்குமாறும் கதையில் சில அதிரடி மாற்றங்களை செய்யுமாறும் ரன்வீர் சிங் தரப்பு தெரிவித்துள்ளது. அது மட்டும் இன்றி முன்னர் பேசிய சம்பளத்தை விட அதிகமாக கேட்பதாகவும் லாப பகிர்வு அதீத நிபந்தனைகள் மற்றும் பட்ஜெட் ரீதியாக தயாரிப்பு தரப்புடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் டான் 3 படத்திலிருந்து விலகுவதாக நடிகர் ரன்வீர் சிங் அறிவித்துள்ளார். இதனால் படத்தின் இயக்குனர் ஃபர்ஹான் அக்தர், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ரன்வீர் சிங் இடையே பிரச்சனை வெடித்துள்ளது இதனை தொடர்ந்து டான் 3 படக்குழு தரப்பில் கடந்த வாரம் பாலிவுட் திரைப்பட அமைப்பான ஃபெடரேஷன் ஆஃப் வெஸ்டர்ன் இந்தியா சினி எம்பிளாய்ஸ் அமைப்பிடம் புகார் அளித்தது.

அந்த புகாரின் பேரில், இந்தி திரைப்பட அமைப்பு நடிகர் ரன்வீர் சிங்குக்கு சினிமாவில் நடிக்க தடை விதித்துள்ளது. இதன்படி பாலிவுட் திரை உலகை சேர்ந்த தயாரிப்பாளர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இது பாலிவுட் ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்