- Advertisement -
Homeபொழுதுபோக்குசண்டைக் காட்சி என்றுதான் அழைத்தார்கள் - கூலி படம் குறித்து ஓபனாக பேசிய கன்னட நடிகர்...

சண்டைக் காட்சி என்றுதான் அழைத்தார்கள் – கூலி படம் குறித்து ஓபனாக பேசிய கன்னட நடிகர் உபேந்திரா!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக ஒரு திருவிழாவாக மாறிவிடுகிறது. முன்பெல்லாம் தீபாவளி பொங்கல் என பண்டிகை காலத்தில்தான் ரஜினி கமல் போன்ற நட்சத்திர நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்வார்கள். இப்போது அப்படியல்ல.

நட்சத்திர நடிகர்களின் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்கள்தான் பண்டிகை தினம் என்பது போல மாறிவிட்டது. ஏனெனில் இப்போதெல்லாம் பான் இந்தியா படங்கள் வருகை அதிகரித்து விட்டதால் தியேட்டர்கள் கிடைப்பது பெரும்பாடாக உள்ளது. அதனால் பண்டிகை காலம் வரை படங்களை ரிலீஸ் செய்யாமல் வைத்திருக்கவும் முடியாது.

- Advertisement -

அப்படி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம்தான் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்த படம் கைதி அல்லது விக்ரம் போல மாஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது.

அதிலும் உபேந்திரா அமீர்கான் போன்ற மாஸான நட்சத்திர நடிகர்களை திரையில் வீணடித்ததாக ரசிகர்களிடையே கடும் விமர்சனம் எழுந்தது.
அதிலும் கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திர ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் உபேந்திரா. அவரை எல்லாம் இன்னும் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வெளிப்படையாக கூறினர்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் உபேந்திரா கூறியதாவது, கூலி படத்தில் நான் ஒரு சிறிய வேடத்தில் நடித்தது குறித்து பலரும் என்னை கேட்கிறார்கள். கூலி படத்தில் நான் நடித்தது ரஜினியின் அடியாள் போல் இருந்ததாக ரசிகர்கள் ட்ரோல் செய்தார்கள். என்னை பொறுத்தவரை ரஜினி படம் என்பதால் மட்டுமே கூலி படத்தில் நடித்தேன்.

நான் அவரது மிக தீவிரமான ரசிகன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது ஒரு நீண்டகால கனவாகவே எனக்கு இருந்தது. கூலி படத்தில் முதலில் ஒரு சண்டைக்காட்சியில் மட்டுமே என்னை நடிக்க அழைத்தார்கள். பிறகு அந்த ரோலை பெரிதுபடுத்தி விட்டார்கள். என்னை பொறுத்த வரை ரஜினி படத்தில் ஒரு சின்ன காட்சியில் நடிப்பதை கூட எனக்கு பெரிய மகிழ்ச்சிதான் என்று நடிகர் உபேந்திரா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்