- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை ரஜினி மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க, ஆனா அப்படி சொல்றதுல எனக்கு விருப்பம் இல்லே -...

என்னை ரஜினி மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க, ஆனா அப்படி சொல்றதுல எனக்கு விருப்பம் இல்லே – வெளிப்படையாக பேசிய மொத ராத்திரி பட நாயகன் ரிஷிகாந்த்!

- Advertisement -

சமீபத்தில் வெளியான மொத ராத்திரி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நாயகனாக மாறியிருக்கிறார் நடிகர் ரிஷிகாந்த். இவர் ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் 15 ஆண்டுகளில் இந்த படம்தான் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் டோரதி என்ற படத்திலும் அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வெளியான மொத ராத்திரி படத்தில் திருமணம் செய்ய விரும்பாத இளைஞனாக நடித்துள்ள ரிஷிகாந்த், குடும்பத்தின் வற்புறுத்தலால் விருப்பமற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதும், அவர் தனது காதலனுடன் செல்ல முயற்சிப்பதும் பிறகு கடைசியில் தாலி கட்டிய கணவருடனே இணைவதும்தான் இந்த படத்தில் கதை.

- Advertisement -

இதில் ஒரு திருமணம் நடக்கும் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் இடையே ஏற்படும் சிக்கல்கள் பிரச்னைகள் உறவுகளுக்குள் இடையே உள்ள மோதல் போன்ற காட்சிகள் அழகாக காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக சாதி வேற்றுமையை பைக்கில் இருவர் செல்லும் காட்சியை வைத்து காட்டிய விதம் உணர்வுபூர்வமானதாக இருந்தது.

மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள், தங்களது படங்களில் இப்படிப்பட்ட உணர்வான காட்சிகளை வைத்து சாதிய வேறுபாடுகளை சமுதாய ஏற்ற தாழ்வுகளை குறிப்பிட்டு காட்டலாம். கத்தி ரத்தம் வெட்டு குத்து அராஜகம் வன்முறை என காட்டாமல், பைக்கில் இருவர் செல்லும் ஒரு காட்சியை வைத்து இயக்குனர் ராஜா கருப்பசாமி அந்த உணர்வை ரசிகர்களுக்கு அற்புதமாக தந்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மொத ராத்திரி பட நாயகன் ரிஷிகாந்த் கூறியதாவது, நான் நடிகர் ரஜினிகாந்த் போல் இருப்பதாக என்னிடம் தொடர்ந்து சிலர் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் ஆரம்பத்தில் இதை கேட்பதற்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாலும் நான் சுயமாக செய்த ஏதேனும் ஒரு விஷயத்துக்காக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது.

எல்லோருக்கும் ரஜினிகாந்த் ஒரு தவிர்க்க முடியாத முன்னுதாரணம். மனிதன் திரைப்படம் தான் நான் பார்த்த முதல் ரஜினிகாந்த் படம். படையப்பா மற்றும் இன்னும் சில படங்களின் கேசட்டுகள் என்னிடம் இருந்தன. அவற்றை அடிக்கடி போட்டுப் பார்ப்பேன். எனக்கு பாபா திரைப்படம் ரொம்பவும் பிடிக்கும். தியேட்டரில் நான் பார்த்த அவருடைய முதல் படம் சிவாஜி என்று நடிகர் ரிஷிகாந்த் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்