பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சல்மான்கான். அவர் மான் ஒன்றை சுட்டுக் கொன்றதாக கூறி ஒரு வழக்கு விசாரணையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். அதில் இருந்து ஒரு தீவிரவாத அமைப்பினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக இந்த கொலை மிரட்டல் விவகாரம் நீடிப்பதால் நடிகர் சல்மான்கானுக்கு மும்பை போலீசார் ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். எப்போதுமே போலீஸ் காவலுடன்தான் அவர் எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறார். துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் அவரை கண்காணித்து பாதுகாத்து வருகின்றனர்.
போலீசார் பாதுகாப்பு மட்டுமின்றி, சல்மான்கானுக்கு ஸ்பெஷல் செக்யூரிட்டி என 70க்கும் மேற்பட்ட ஸ்பவுன்சர்கள் எப்போதும் தீவிர கண்காணிப்பில், அவரை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து உஷார் நிலையில் இருந்து வருகின்றனர். குண்டு துளைக்காத கண்ணாடி உள்ள கார்களில்தான் சல்மான்கான் பயணித்து வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா சத்யராஜ் போன்றவர்களும் நடித்திருந்தனர். ஆனால் படம் பிளாப் ஆகி விட்டது.
இந்த சூழலில் நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. லாரன்ஸ் பிஷ்நோய் என்ற அமைப்பினர், கடந்த ஆண்டு ஏப்ரலில் அவர் வீட்டின் முன் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நிலையில் இப்போது மீண்டும் இந்த கொலை மிரட்டல் வந்திருப்பது, மும்பை சினிமா வட்டாரத்தில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது வாட்சப்பில் வந்துள்ள அந்த கொலை மிரட்டில், நடிகர் சல்மான்கானை வீடு புகுந்து கொலை செய்வோம். அவர் செல்லும் காரில் பாம் வைத்து வெடிக்க செய்வோம் என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சல்மான்கானுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து மும்பை போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.





