தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக நடிகராக ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர். நடிகர் சசிக்குமார் இயக்கிய முதல் படம் சுப்ரமணியபுரம். அதில் வில்லனாக சமுத்திரக்கனி நடித்திருந்தார். ஏற்கனவே விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு என்ற படத்தை இயக்கியவர் சமுத்திரக்கனி.
அடுத்து அவர் இயக்கிய படம் நாடோடிகள். இந்த படத்தில் சசிக்குமார் நாயகனாக நடித்திருந்தார். விஜய் வசந்த் பரணி கஞ்சா கருப்பு அனன்யா அபிநயா ராஜா லட்சுமி ராமகிருஷ்ணன் ஜெயப்பிரகாஷ் பாரதி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனி அப்பா வினோதய சித்தம் நிமிர்ந்து நில் தொண்டன் நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களை அவரே டைரக்ட் செய்தார். மேலும் பல படங்களை சமுத்திரக்கனியே தயாரிக்கவும் செய்தார். இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் சமுத்திரக்கனி.
தமிழில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடிகர் சமுத்திரக்கனிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக தெலுங்கில் நிறைய படங்களில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார். அவரது உயரம் முக அமைப்புக்கு நல்ல கேரக்டர்களை அவருக்கு இயக்குனர்கள் தருகின்றனர். சிறந்த நடிப்பை சமுத்திரக்கனி வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.
இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி சமுதாய சிந்தனை மிக்க நல்ல படங்களை தந்த இயக்குனர். எப்போது அவர் மீண்டும் இயக்குனராக மாறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் லேட்டஸ்ட் தகவலாக நடிகர் சமுத்திரக்கனி மீண்டும் இயக்குனராக விரைவில் களம் இறங்குகிறார் எனத் தெரிய வந்துள்ளது.
சமுத்திரக்கனி இயக்கி அவரே நாயகனாக இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஸ்கூல் வேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்கள் பயணிக்கும் போது ஏற்படும் சம்பவங்கள் குறித்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நிச்சயம் ஸ்கூல் வேன் படம் யாரும் எதிர்பாராத ஒரு கதைக்களத்தில் சமுத்திரக்கனி இயக்குவார் என்று ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.





