- Advertisement -
Homeபொழுதுபோக்குஈஷா யோகாவுக்கு போனதால் என் வாழ்க்கை எதுவுமே மாறலே, சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து பேசிய...

ஈஷா யோகாவுக்கு போனதால் என் வாழ்க்கை எதுவுமே மாறலே, சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து பேசிய நடிகர் சந்தானம் – என்ன ப்ரோ சொல்றீங்க?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். இப்போது நாயகனாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் காமெடி செய்துக்கொண்டு இருந்த அவரை, தனது வல்லவன் மன்மதன் படங்களில் நடிக்க வாய்ப்பளித்து காமெடி நடிகராக்கியது நடிகர் சிலம்பரசன்தான்.

சந்தானம் காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஆர்யா விஷால் உதயநிதி ஜீவா உள்ளிட்ட நடிகர்களுடன் பல படங்களில் காமெடி ரோலில் நடித்து சந்தானம் முன்னணி காமெடி நடிகராக மாறினார். அவர்களுடன் அவர் இரட்டை நாயகர்களில் ஒருவராகவே பல படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

அதன்பிறகு நாயகனாக நடிக்க துவங்கிய சந்தானம் பல வெற்றிப் படங்களை கொடுத்தார். தில்லுக்கு துட்டு டிடி ரிடர்ன்ஸ் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் குலுகுலு ஏ ஒன் சபாபதி வடக்குப்பட்டி ராமசாமி என பல படங்களில் நடித்த சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் அடுத்ததாக வெளிவர இருக்கிறது.

கோவையை அடுத்துள்ள வெள்ளியங்கிரி மலைக்கு அருகில் ஈஷா யோக மையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு தியானலிங்கம் லிங்க பைரவி கோவில் சூரிய குண்டம் சந்திர குண்டம் தீர்த்த குளங்கள் ஆதியோகி சிலை உள்ளிட்டவை காணப்படுகின்றன. சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் இந்த ஈஷா யோக மையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் ஈஷா மையங்கள் உள்ளன. யோகா தியானம் பயிற்சி தரப்படுகின்றன.

- Advertisement -

சமீபத்தில் ஈஷா யோக மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழக கவர்னர் ஆர்என் ரவி என பல முக்கிய வி விஐபிகள் இங்கு மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றுள்ளனர். இந்திய சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் பலரும் ஈஷா யோகாவில் பயிற்சி பெற்றவர்கள்தான்.

ஈஷா யோக மையம் குறித்து நடிகர் சந்தானம் கூறியதாவது, ஈஷாவில் பயிற்சி எடுத்துக் கொண்டதால் என் வாழ்க்கை எதுவுமே மாறலே. ஆனால் அந்த வாழ்க்கையை நான் பார்க்கிற விதம் கொஞ்சம் என்கிட்ட மாறி இருக்குது. முதலில் வாழ்க்கையில் வர்ற பிரச்சனைகளை எல்லாம் வேற மாதிரி பார்ப்பேன். இப்போ வேற மாதிரி பார்க்கிறேன். அந்த பக்குவத்தை சத்குரு எனக்கு கொடுத்திருக்காங்க, என்று நடிகர் சந்தானம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்