- Advertisement -
Homeபொழுதுபோக்குடிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இப்படி ஒரு கேரக்டரில் சந்தானம் நடிக்கிறாரா? - அப்போ நொடிக்கு...

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இப்படி ஒரு கேரக்டரில் சந்தானம் நடிக்கிறாரா? – அப்போ நொடிக்கு நொடி கலாய்த்து தள்ளி ரசிகர்களை அசத்துவாரே?

- Advertisement -

காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் காமெடி ரோல்களில் நடித்தவர், ஒரு கட்டத்தில் ஆர்யா ஜீவா உதயநிதி ஸ்டாலின் விஷால் போன்றவர்களுடன் இரட்டை நாயகர்களில் ஒருவராக நடித்தார். பிறகு அவரே கதாநாயகனாகவும் மாறி பல வெற்றிப் படங்களை கொடுத்தார். அடுத்து சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் குறித்து நடிகர் சந்தானம் கூறியதாவது, தில்லுக்கு துட்டு படத்தில் வெற்றிக்கு பிறகு அதே மாதிரியான படங்களை ரசிகர்கள் மிகவும் விரும்பினார்கள். அதனால் டிடி ரிட்டன்ஸ் வரை நடித்தேன். அதன் அடுத்த கட்டம்தான் டிடி நெக்ஸ்ட் லெவல் படம். இந்த படத்தில் வழக்கத்தை விட பல கூடுதல் சிறப்புகள் இருக்கின்றன.

- Advertisement -

நான் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் இதுதான். மேலும் இந்த படத்தில் இயக்குனர்கள் கௌதம மேனன் செல்வராகவன் இணைந்து நடித்திருக்கிறார்கள். அத்துடன் இந்த படத்தில் ஹாரர் காமெடி தாண்டி நிறைய ஆக்சன் சண்டைக்காட்சிகளும் இருக்கின்றன.

நான் சினிமா விமர்சனம் செய்யும் யூடியூப்பராக இந்த படத்தில் நடிக்கிறேன். இந்த விமர்சனத்தால் எனக்கு ஒரு எதிர்பாராத விதமான சம்பவம் நடக்கிறது. அதற்குப் பிறகு என்னென்ன சிக்கல்கள் வருகிறது. அதையெல்லாம் சமாளித்து எப்படி நான் மீண்டு வருகிறேன் என்பதுதான் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கதை.

- Advertisement -

படத்தின் நாயகியாக நடித்துள்ள கீர்த்திகா திவாரி தெலுங்கில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்திருக்கிறார். அவருக்கு படத்தில் இரண்டு விதமான கெட்டப் இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நிழல்கள் ரவி கஸ்தூரி யாஷிகா ஆனந்த் கிங்ஸ்லி லொள்ளு சபா மாறன் மொட்டை ராஜேந்திரன் என்று எனது படங்களில் நடிக்கும் நடிகர்கள் டீம் அப்படியே இந்த படத்திலும் இருக்கிறது.

எனக்கு அம்மாவாக கஸ்தூரியம் அப்பாவாக நிழல்கள் ரவியும் படம் முழுவதும் வருகின்றனர். எனக்கு தங்கையாக யாசிகா ஆனந்த் நடித்துள்ளார். அண்ணன் தங்கை கலாய்க்கிற சீன்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அது இந்த படத்தில் நிறையவே இருக்கிறது என்று நடிகர் சந்தானம் கூறி இருக்கிறார். அடுத்து சிலம்பரசன் நடிக்கும் எஸ்டிஆர் 49 படத்தில் காமெடி ரோலில் சந்தானம் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்