- Advertisement -
Homeபொழுதுபோக்குநமக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? இது என்ன நியாயம் பாலா சார்?

நமக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? இது என்ன நியாயம் பாலா சார்?

- Advertisement -

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராக வலம் வந்தவர். அவரது திரைப்படங்களில் எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வும் அவர்களது சோகமும் நிறைந்து இருக்கும். பாலா இயக்கிய “சேது” திரைப்படம் விக்ரமிற்கு ஒரு திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது. அதே போல் அவர் இயக்கிய “நந்தா” திரைப்படம் சூர்யாவிற்கு திருப்பு முனையான திரைப்படமாக அமைந்தது.

அந்த வகையில் விக்ரம் தனது மகனான துருவ் விக்ரமை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தும் வகையில், தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்த பாலாவையே தனது மகன் அறிமுகமாகும் திரைப்படத்தை இயக்க சொல்லலாம் என முடிவெடுத்தார். பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் “வர்மா” திரைப்படம் உருவானது. ஆனால் அத்திரைப்படம் விக்ரமிற்கு திருப்தி அளிக்கவில்லை. ஆதலால் அத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதன் பின் துருவ் விக்ரம் “ஆதித்யா வர்மா” படத்தில் நடித்தார்.

- Advertisement -

பாலா இயக்கிய “வர்மா” திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இதனை தொடர்ந்து பாலா, சூர்யாவை வைத்து “வணங்கான்” திரைப்படத்தை தொடங்கினார். இத்திரைப்படத்தை சூர்யாவே தயாரிக்க தொடங்கினார். ஆனால் ஒரு கட்டத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து சூர்யா அத்திரைப்படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளிவந்தது.

தற்போது “வணங்கான்” திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். அதுவும் தனது சொந்த பணத்தில் அந்த படத்தை பாலா எடுத்து வருகிறாராம். தன்னுடைய சொந்த பணத்தில் எடுப்பதால் மிகவும் வேகமாக இந்த படத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறாராம். தனது முந்தைய படங்களை போல் இழுத்தடிக்கவில்லையாம். தனது சொந்த பணத்தில் எடுப்பதால்தான் பாலா தனது வேலையை காண்பிக்காமல் இருக்கிறார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்