- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 பட பிரேமோஷனுக்காக, 69 வயதிலும் பம்பரமாக சுழலும் உலக நாயகன், ஆனா இந்த...

இந்தியன் 2 பட பிரேமோஷனுக்காக, 69 வயதிலும் பம்பரமாக சுழலும் உலக நாயகன், ஆனா இந்த விஷயத்துல நியாயமா இல்லையே? – என்ன ஆண்டவரே… நீங்களுமா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தனது 5 வயதில், களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் படங்களில் அவர் நடித்தார். பிறகு கே பாலசந்தரின் அரங்கேற்றம் படம் மூலம், வாலிபராக திரையில் தோன்றினார். இப்போது 236வது படமாக தக்லைப் படத்தில், மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சொந்த வாழ்க்கையில், அரசியல் வாழ்க்கையில் கமல்ஹாசன் குறித்த பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் இருந்தாலும் சினிமா கலைஞனாக அவரது சாதனைகள் யாராலும் எண்ணிக்கூட பார்க்க முடியாதது. தனது சினிமா வாழ்க்கையில், தன்னை மட்டுமின்றி தமிழ் சினிமாவையும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்றவர் நடிகர் கமல்ஹாசன்தான்.

நடிப்பிலும், திரைக்கதையிலும், வசனங்களிலும், தொழில்நுட்பங்களிலும் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய மாற்றங்களை, ஏற்றங்களை ஏற்படுத்தியவர் கமல்ஹாசன் என்றால் அது மிகையல்ல. எந்த கேரக்டரை கமல்ஹாசன் ஏற்று நடித்தாலும், அதில் அதிகபட்சமாக என்ன தரத்தை தர முடியுமோ, அதை அவர் தந்துவிடுவார். அதற்கு பிறகு அதில் தருவதற்கு எதுவுமே இருக்காது.

இப்போது 69 வயதிலும், கமல்ஹாசனின் அந்த அசுரத்தனமான நடிப்பு ஆற்றலை பார்த்து வியந்து போன ஷங்கர், 4 நாட்கள் கயிற்றில் தொங்கிக்கொண்டு அவர் காலை முதல் இரவு வரை நடித்த அந்த நாட்களை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. இந்த வயதில், அப்படி ஒரு டெடிகேஷனலான உழைப்பை, நடிப்பை உலகத்தில் எந்த ஒரு நடிகராலும் தந்துவிட முடியாது என கமல்ஹாசனை பாராட்டி இருந்தார். இது முற்றிலும் யாராலும் மறுக்க முடியாக உண்மைதான்.

ஆனால் விக்ரம் படத்துக்கு பிறகு, கமல்ஹாசனின் செயல்பாடுகளில் நிறைய வித்யாசம் தெரிவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக அவரும் ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் என்பதால், அவர் நடிக்கும் படங்களில் தயாரிப்பாளரை சிரமப்படுத்த மாட்டார், தேவையின்றி செலவுகளை இழுத்துவிட மாட்டார் என்று கூறப்பட்டது.

அந்த நிலை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. இந்தியன் 2 படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிக்காக மும்பை, ஐதராபாத், டெல்லி உள்பட பல மாநிலங்களுக்கு செல்லும் கமல், தனி விமானத்தில்தான் செல்கிறார். அவருக்கு முன்பாக 10, 15 பவுன்சர்கள், அந்த மாநிலங்களுக்கு முன்பே செல்கின்றனர். ஒரு மணி நேரம் ஓய்வெடுக்க 5 நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். இப்படி அவர் செய்யும் ஆடம்பரங்களுக்கான ஏகப்பட்ட செலவு எல்லாம் தயாரிப்பாளர் தலையில்தான். இந்தியன் 2 பிரமோவுக்காக கமல் பம்பரமாக சுற்றினாலும், சாட்டையடி விழுவது என்னவோ தயாரிப்பாளருக்குதான் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.

சற்று முன்