- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இரவு 2 மணிக்கு என் மனைவியிடம் முடிவு கேட்டது தவறா? அந்த நேரத்தில் அவரிடம்...

நான் இரவு 2 மணிக்கு என் மனைவியிடம் முடிவு கேட்டது தவறா? அந்த நேரத்தில் அவரிடம் கேட்டது ஏன்? – விளக்கம் தந்த நடிகர் சரத்குமார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்குமார். அப்போது சூரிய வம்சம் நாட்டாமை நட்புக்காக என பல வெற்றிப் படங்களை தந்தவர். பிறகு சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். ஆனால் சினிமாவில் வரவேற்பு பெற்ற அளவுக்கு அரசியலில் சரத்குமாருக்கு பெரிய அங்கீகாரம் வரவேற்பு கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டில் இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அப்போது சமத்துவ மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தமிழ்நாட்டில் தேர்தலை சந்தித்தது. இதில் சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

இதே தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரும் தேமுதிக சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். அப்போது பாஜகவுடன் சமக கூட்டணி குறித்து இரவு 2 மணிக்கு ராதிகாவுடன் சரத்குமார் ஆலோசித்து முடிவு செய்ததாக கூறியது பெரிய அளவில் வைரலானது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சரத்குமார் கூறியதாவது, நான் அரசியலில் இரவு 2 மணிக்கு ஒரு முடிவு எடுத்ததாக சோஷியல் மீடியாவில் பலரும் திட்டிக்கொண்டு இருக்கின்றனர். சோஷியல் மீடியாவில் பிரபலங்களை கலாய்ப்பது இப்போது வழக்கமாகி விட்டது. என்னை கிண்டலடிப்பது அவர்களுக்கு சந்தோஷம் என்பதால் நான் அதை கண்டுக்கொள்வது இல்லை.

இரவு 2 மணிக்கு எப்படி முடிவெடுத்தார் என்று விமர்சிக்கின்றனர். முடிவு என்பதை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். அந்த நாளில் ஒரு விஷயம் குறித்து நான் நிறைய சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். நாள் முழுவதும் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டே இருக்கிறேன். இரவிலும் தூக்கம் வராமல் அதைப் பற்றியே யோசிக்கிறேன்.

அப்போது என் மனைவி ஏதோ படம் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரும் தூங்காமல் இருக்கிறார். அப்போது என் மனைவியிடம் நான் என் முடிவை பற்றி கேட்கிறேன். அது தப்பா சரியா என்று அவரிடம் பேசுகிறேன். அப்போது நான் என் மனைவியுடன் இருந்தேன். அதனால் அவரிடம் கேட்கிறேன். பல பேர் அந்த நேரத்தில் கேர்ள் பிரண்டுடன் இருந்திருப்பார்கள். ஆனால் நான் என் மனைவியிடம்தான் என் முடிவை பற்றிக் கேட்டேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்