- Advertisement -
Homeபொழுதுபோக்குசரத்குமார் குடும்பத்தை விட்டு விலகினாரா வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவ்? என்ன கொடுமை சார் இது?

சரத்குமார் குடும்பத்தை விட்டு விலகினாரா வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவ்? என்ன கொடுமை சார் இது?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் சரத்குமார். இப்போதும் அவர் நாட்டாமை சூரியவம்சம் நட்புக்காக சமுத்திரம் படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார். இப்போது குணச்சித்திர வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.

சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் வரலட்சுமி சரத்குமார். முதல் மனைவி சாயாதேவியை பிரிந்த சரத்குமார், நடிகை ராதிகாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் இப்போது சாயாதேவியும் சரத்குமார் குடும்பத்துடன் இணைந்து விட்டார். இவர் வணங்கான் படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சர்கார் சண்டக்கோழி 2 தாரை தப்பட்டை மதகஜ ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்தாண்டில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார்.

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் தேவயானி மணிவண்ணன் ஆர் சுந்தர்ராஜன் ஜெய் கணேஷ் சத்யபிரியா பிரியாராமன் நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்த படம் சூரியவம்சம். கடந்த 1990களில் வெளியான இந்த படம் மாஸ் ஹிட் படமாகும். இதில் சக்திவேல் கவுண்டராக அப்பா சரத்குமார், சின்ராசு கேரக்டரில் மகனாகவும் சரத்குமார் 2 வேடங்களில் நடித்திருப்பார்.

- Advertisement -

இந்த படத்தில் ஒரு காட்சியில், சக்திவேல் கேரக்டர் சரத்குமார் தன் குடும்பத்துடன் புகைப்படம் எடுக்க அமர்ந்திருப்பார். அப்போது சின்ராசு ஓரமாக நிற்பார். அவரை தன் குடும்பத்தில் சேர்க்க விரும்பாத சரத்குமார், ராதிகா ஏங்க சின்ராசு என்று கூறியும், என் குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு என போட்டோகிராபரிடம் சொல்வார். இந்த காட்சியை பலரும் இணையத்தில் ரீ கிரியேட் செய்து கலாய்ப்பது வழக்கமாக உள்ளது.

தற்போது சரத்குமார் வீட்டில் பொங்கல் பண்டிகையை குடும்பமாக கொண்டாடினர். அப்போது சூரியவம்சம் படத்தில் வருவது போல் சரத்குமார் தன் குடும்பத்துடன் அமர்ந்திருக்க, மருமகன் நிக்கோலாய் சச்தேவ் ஓரமாக நிற்கிறார். அப்போது குடும்பத்தில் எல்லோரும் வந்தாச்சா, என போட்டோகிராபர் கேட்க, ஏங்க சின்ராசு என ராதிகா கேட்க, என் குடும்பத்தில் எல்லோரும் வந்தாச்சு எடு என்க, ஓரமாக நிற்கும் நிக்கோலாய் சச்தேவ் பரிதாபமாக பார்க்கிறார். இந்த பன் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்